தொலைந்து போன தமிழ் திரைப்படம்.. இப்போ நினைச்சா கூட பார்க்க முடியாத படம் எது தெரியுமா?

Published:

தமிழ் சினிமாவை பொருத்தவரை எந்த ஆண்டில் வெளியான திரைப்படமாக இருந்தாலும் அதை தற்போது பார்க்கும் வசதி உள்ளது. திரையரங்குகளில் வெளியான படமாக இருந்தாலும், திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த படமாக இருந்தாலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் நினைத்தாலும் பார்க்க முடியாது என்ற அளவுக்கு அச்சுப்பிரதியே இல்லாமல் இருக்கும் படம் என்றால் அது ’கீசக வதம்’ என்ற படம்தான்.

keesaga vadham

இந்த படம் ஒரு தொலைந்து போன திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் வெளியான முதல் மௌன படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.

இந்த படத்துல நடிச்சது சிவாஜியே இல்லை.. ஆஸ்கர் நிர்வாகிகள் நம்ப மறுத்த ’தெய்வ மகன்’ திரைப்படம்..!

கடந்த 1918 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. நடராஜ முதலியார் என்பவர் இந்த படத்தை தயாரித்து இயக்கினார். மகாபாரதத்தின் ஒரு சிறு கதையை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த இந்த படத்தின் கதை மற்போர் காட்சியோடு ஆரம்பிக்கும்.

ஒரு மற்போர் வீரர் விராட நாடு என்ற நாட்டில் உள்ள அனைவரையும் வீழ்த்தி விடும் நிலையில், அந்த வீரரை பீமன் வதம் செய்யும் கதை தான் இந்த ’கீசக வதம்’. ஒருமுறை பஞ்சபாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலியை, விராட நாட்டின் அரசியின் சகோதரர் கீசகன் அடைய முயல்கிறார்.

ஆனால் அவனிடம் இருந்து தப்பிக்க பீமனின் உதவியை நாடுகிறார் பாஞ்சாலி. பீமன் பெண் வேஷம் விட்டு கீசகனை வதம் செய்யும் கதை தான் ’கீசகவதம்’. இந்த படத்தை நடராஜ முதலியார் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த நிலையில் 50 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததால் அவருக்கு அந்த காலத்திலேயே 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.

keesaga vadham2

இந்த படத்தை தயாரிப்பதற்காக நடராஜ முதலியார் சென்னையில் 1915 ஆம் ஆண்டு ஒரு ஸ்டூடியோவை ஏற்பாடு செய்தார். கொல்கத்தா சென்று சினிமா இயக்குவது எப்படி என்பதை கற்றுக் கொண்டார். அப்போது இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒரு ஆவண படக்குழு ஒன்றின் கேமிராமேனை அறிமுகம் செய்து கொண்டு கேமராவை எப்படி இயக்குவது என்பதையும் கற்றுக் கொண்டார். இதற்காக அவர் அந்த கேமிராமேனுக்கு ஒரு காரை பரிசளித்ததாக கூறப்படுகிறது.

பொறுத்தது போதும் பொங்கி எழு.. வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் நடிகை கண்ணாம்பா!

இயக்குவது, ஒளிப்பதிவு செய்வது ஆகியவற்றை கற்று கொண்டவுடன் அவரே திரைக்கதை, வசனம் எழுதி காட்சிகளையும் அமைத்து எடிட் செய்து இந்த கால டி.ராஜேந்தர் போல் செயல்பட்டார். இந்த படம் மௌன படமாக 1918ஆம் ஆண்டு வெளியானது. இருப்பினும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சப்டைட்டில் உடன் வெளியானது.

அதுமட்டுமின்றி படம் தொடங்குவதற்கு முன்னரே தியேட்டரில் ஒருவர் நின்று இந்த படத்தின் கதையை மொத்தமாக கூறிவிடுவார். எனவே பார்வையாளர்கள் கதையை கேட்டுவிட்டு அதன் பின் படம் பார்த்ததால் மௌன படமாக இருந்தாலும் அவர்களுக்கு கதை புரிந்தது.

keesaga vadham1

இந்த படத்திற்கு ஹிந்தி சப்டைட்டில்களை எழுதியவர் மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்பது கூடுதல் ஆச்சரியம். அதுமட்டும் இன்றி அந்த காலத்திலேயே இந்த படம் பர்மா, மலேயா, பினாங்கு போன்ற வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டதால் அந்த கால உலக படமாகவும் கருதப்பட்டது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக நடராஜ முதலியார் பல படங்களை எடுத்தார். பெரும்பாலும் அவை புராணக் கதைகளாகவே இருந்தது. இதன் பின்னர் 1930ஆம் ஆண்டு பேசும் படங்கள் வெளிவர தொடங்கியதை அடுத்து நடராஜ முதலியார் படம் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!

தென்னிந்தியாவில் வெளியான முதல் படமாக இருந்தாலும், இந்த படத்தின் அச்சு பிரதியை நடராஜ முதலியார் தொலைத்து விட்டதாகவும், அதனால் இந்த படம் ஒரு தொலைந்து போன படமாகவே பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இப்போது நினைத்தாலும் கூட சினிமா ரசிகர்கள் பார்க்க முடியாது என்றாலும் தென்னிந்தியாவில் வெளியான முதல் படம் என்ற பெருமை சினிமா உள்ளவரை இந்த படத்திற்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...