ராபர்ட்-ராஜசேகர், பாரதி – வாசு வரிசையில் ஒரு இரட்டை இயக்குனர்கள்.. இளையராஜாவுக்கு முதல் வாய்ப்பு..!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்கள் இருந்தது உண்டு. அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார்கள் அனைவரும் அறிந்ததே.

சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு தமிழ் திரை உலகில் இரட்டையர்கலாக வலம் வந்தனர். அதன்பின் ராபர்ட் ராஜசேகர் மற்றும் பாரதி வாசு ஆகியோர்கள் வரிசையில் ஒரு இரட்டை இயக்குனர்கள் பெரும் அளவு புகழ் பெற்றவர்கள் என்றால் அவர்கள் தேவராஜ் – மோகன்.

எம்ஜிஆர் படங்களில் நடித்து எம்.எல்.ஏ ஆன காமெடி நடிகர்.. தமிழக அரசியலில் ஒரே துணை அமைச்சர்..!

இந்த இரட்டையர்கள் அன்னக்கிளி என்ற திரைப்படத்தை இயக்கிய போது இசைஞானி இளையராஜாவுக்கு முதல் வாய்ப்பை வழங்கினார்கள். இந்த படத்தில் தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தேவராஜ் – மோகன் இரட்டையர்கள் இயக்கிய முதல் திரைப்படம் பொண்ணுக்கு தங்க மனசு. சிவகுமார், ஜெயசித்ரா, விஜயகுமார் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெற்றியைப் பெற்றாலும் அதன் பிறகு இந்த இரட்டையர்கள் இயக்கிய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தேவராஜ் – மோகன் இயக்கத்தில் உருவான கண்மணி ராஜா அன்பு ரோஜா, உறவு சொல்ல ஒருவன், உங்களில் ஒருத்தி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியை பெற்றன.

வரும், ஆனா வராது.. லட்சக்கணக்கில் சம்பளம் பெறாமல் ஏமாந்த நடிகர் என்னத்த கண்ணய்யா..!!

ஆனால் சிவக்குமார் நடிப்பில் தேவராஜ் – மோகன் இயக்கத்தில் உருவான அன்னக்கிளி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் தேவராஜ் மோகனின் திரைக்கதை மற்றும் இயக்கம் ஆகியவை இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்களாக அமைந்தன.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி வெளியான நிலையில் அதே ஆண்டு பாலூட்டி வளர்த்த கிளி என்ற திரைப்படத்தை தேவராஜ் – மோகன் இயக்கினர். வியட்நாம் வீடு சுந்தரம் கதையில் உருவான இந்த படத்தில் விஜயகுமார் ஸ்ரீபிரியா நடித்திருந்தனர். இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது.

அதன் பிறகு உறவாடும் நெஞ்சம், கவிக்குயில் ஆகிய படங்களை இயக்கினர். கவிக்குயில் திரைப்படத்தில் சிவக்குமார் மிக அற்புதமாக நடித்திருந்தார். நடிகர் சிவகுமாரின் நூறாவது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்தை இயக்கியவர்களும் இந்த இரட்டையர்கள் தான். இந்த படம் கன்னடத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.  சிவக்குமார் தீபா நடித்த இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் நல்ல வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பூந்தளிர், சக்களத்தி, ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது, கண்ணில் தெரியும் கதைகள் ஆகிய படங்களை இந்த இரட்டையர்கள் இயக்கினர். இதன் பிறகு தமிழ் சினிமாவின் வழக்கப்படி இரட்டை இயக்குனர்கள் பிரிந்தனர். இதன் பிறகு தேவராஜ் தனியாக ஒரு சில படங்களை இயற்றினார். ஆயிரம் முத்தங்கள், ராஜாதி ரோஜாக்கிளி, இசை பாடும் தென்றல், அன்னக்கிளி சொன்ன கதை ஆகிய படங்களை அவர் இயக்கினாலும், இவற்றில் எந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!

இயக்குனர் தேவராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு காலமான நிலையில் இயக்குனர் மோகன் அவருக்கு முன்பே 2012 ஆம் ஆண்டு காலமானார். இருவரும் இணைந்து பல வெற்றி படங்கள் கொடுத்தாலும் இருவரும் பிரிந்த பின்னர் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்கவில்லை.