எம்ஜிஆர் படங்களில் நடித்து எம்.எல்.ஏ ஆன காமெடி நடிகர்.. தமிழக அரசியலில் ஒரே துணை அமைச்சர்..!

மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் திரைப்படங்களில் நடித்தவர்கள் பின்னாளில் அவர் அரசியல் கட்சி தொடங்கிய போது அந்த கட்சியிலும் எம்எல்ஏ, அமைச்சர்களாக இருந்திருந்தார்கள். அந்த வகையில் எம்ஜிஆர் படங்களில் காமெடி நடிகராக நடித்த நடிகர் அதிமுகவில் இணைந்து தமிழக அரசியலில் எம்எல்ஏவாகவும் சில ஆண்டுகள் இருந்தார்.

அவர் தான் எம்ஜிஆரின் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஐசரிவேலன். நடிகர் ஐசரிவேலன், சிவாஜி நடித்த எங்க மாமா என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அவர் எம்ஜிஆரின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

குறிப்பாக ரிக்சாக்காரன், நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், நீதிக்கு தலைவணங்கு, நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என தான் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து எம்ஜிஆர் கடைசி படம் வரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்தார்.

6 வயதில் நடிப்பு.. எம்ஜிஆர் சிவாஜி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்.. ஜோதிலட்சுமியின் வாழ்க்கை பயணம்..!

எம்.ஜி.ஆருக்கு இவருடைய நடிப்பு பிடித்தது என்பதால் இவருக்கு  தனது படத்தில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் காமெடியில் கலக்கினார். எம்ஜிஆர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு சென்ற பின்னரும் ஐசரிவேலன் ஒரு சில படங்களில் நடித்தார்.

மாங்குடி மைனர், அன்பின் அலைகள், கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்தார். அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன், கமல்ஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல் ஆகிய படங்களில் நடித்த ஐசரிவேலன் ரஜினியின் தனிக்காட்டு ராஜா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

என்.டி.ஆர் கட்சிக்கு பெயர் வைத்தவரே எம்ஜிஆர் தான்.. இருவருக்கும் உள்ள ஆழ்ந்த நட்பு..!

அதேபோல் ரஜினியின் தங்க மகன், பிரபுவின் அடுத்த ஆல்பர்ட் போன்ற படங்களில் நடித்த அவர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான முதல் படமான பகல் நிலவு என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இவ்வாறு சினிமாவில் தனது காமெடி நடிப்பு முத்திரையை பதித்து மக்கள் மனதில் இடம் பெற்ற ஐசரிவேலன் அதிமுக கட்சியில் இணைந்தார். அவருக்கு ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 1977 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஐசரிவேலனுக்கு 28,416 வாக்குகள் கிடைத்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கு 26 ஆயிரத்து 928 வாக்குகள் கிடைத்தது.

இந்த நிலையில் அவர் 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏவாக சென்றார். அதுமட்டுமின்றி இவருக்கு துணை அமைச்சர் என்ற பதவியும் கிடைத்தது. தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதல்வர் என்ற பதவியை அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் துணை அமைச்சர் என்ற பதவியில் இருந்த ஒரே ஒரு எம்எல்ஏ ஐசரிவேலன் தான்.

எல்லாருக்கும் சம்பளம் செட்டில் செஞ்சாதான் ஷுட்டு.. இல்லனா பேக்கப்!.. இப்படியெல்லாமா எம்ஜிஆர் பண்ணுவாரு..?

நடிகர் ஐசரி வேலன் மகன்தான் தற்போதைய திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இவர் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவருடைய பேரன் தான் நடிகர் வருண். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews