வரும், ஆனா வராது.. லட்சக்கணக்கில் சம்பளம் பெறாமல் ஏமாந்த நடிகர் என்னத்த கண்ணய்யா…!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் அறிமுகமாகி, கடைசி வரை சின்ன சின்ன கேரக்டரில் நடித்து காலமான நடிகர்கள் ஒரு சிலர் உள்ளனர், அவர்களில் ஒருவர் தான் என்னத்த கண்ணய்யா.

கடந்த 1940களில் நாடகத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் தொடங்கிய என்னத்த கண்ணய்யா 2012ஆம் ஆண்டு மரணமடையும் வரை அவர் சின்ன சின்ன கேரக்டர்களில் தான் நடித்தார்.

மதுரையைச் சேர்ந்த என்னத்த கண்ணய்யா சிறுவயதில் வைரம் நாடகக் குழு என்ற நாடகக் குழுவில் இணைந்து நடித்தார். இவருடன் நடித்தவர்கள் தான் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணி மற்றும் டி.கே. சண்முகம். இதனை அடுத்து பிரபலத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

வில்லன்.. குணச்சித்திர நடிகர்… தயாரிப்பாளராகவும் சாதித்த சங்கிலி முருகன்..!!

ரத்னகுமார் என்ற திரைப்படத்தில் அவர் அறிமுகமாகி ஏழை படும் பாடு, முதலாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த நான் என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் தான் அவர் என்னத்த வந்து, என்னத்த போயி என்று வசனம் பேசி இருப்பார் என்பதும் அதன் பிறகு தான் இவருடைய கண்ணையா என்ற பெயருடன் என்னத்த என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.

இதனை அடுத்து ரவிச்சந்திரன் நடித்த மூன்றெழுத்து என்ற திரைப்படத்தில் வித்தியாசமான காமெடி வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். இவரது நடிப்புத்திறமையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது கொடுத்தது. இந்த விருதை எம்ஜிஆர் தனது கையாலே அவருக்கு கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

நடிகர் என்னத்த கண்ணய்யா, ராஜம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். சினிமாவில் தனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் சிக்கனமாக குடும்பத்தை நடத்தினார். 6 குழந்தைகளயும் நன்றாக படிக்க வைத்து ஒரு பைசா கூட கடன் வாங்காமல் திருமணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் 1990க்கு பிறகு இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தது. இருப்பினும் மனதை தளரவிடாமல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக வாய்ப்புகள் தேடியே அலைந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ’மிடில் கிளாஸ் மாதவன்’ என்ற திரைபடத்தில் வடிவேலுக்கு தந்தையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் வடிவேலுவிடம் அடி வாங்கும் போது அவரது நடிப்பு ரசிக்கும் வகையில் இருந்தது.

இதனை அடுத்து தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்திலும் வடிவேலுவுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் டாக்ஸி வருமா என்று வடிவேலு கேட்க அதற்கு வரும் ஆனால் வராது என்று இவர் கூறிய வசனம் இன்று வரை பிரபலம். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இன்று வரை இந்த வசனம் உதவியாக உள்ளது. தனுஷின் படிக்காதவன் உள்பட ஒரு சில படங்களில் நடித்த என்னத்த கண்ணையா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

என்னத்த கண்ணையா கடைசி காலத்தில் நடித்த போது பல தயாரிப்பாளர்கள் அவருக்கு பேசிய பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு வரவேண்டிய பணம் மட்டும் லட்சக்கணக்கில் இருந்ததாக கூறப்பட்டது. அந்த பணத்தை நீங்கள் ஏன் வசூல் செய்யவில்லை என்று ஒரு பேட்டியில் கேட்டபோது என்னத்த வசூல் செய்ய என்று அவரது பாணியிலேயே கூறியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews