கைதான ஷாஹ்சாத் என்பவர், பாகிஸ்தானின் ISIக்கு முகவராக செயல்பட்டவர் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இவர் ராம்பூர் மாவட்டத்தின் தாண்டா அருகே உள்ள அசாத் நகர் என்ற பகுதிய்ல் உள்ள அப்துல் வாஹாபின் மகன் என்பதும், இந்தியாவுக்கு எதிராக கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது
உத்தர் பிரதேச மாநில காவல்துறை வழங்கிய தகவலின்படி, ஷாஹ்சாத் பல ஆண்டுகளாக எல்லை கடத்தலில் ஈடுபட்டதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் பல மர்மமான பொருட்களை கடத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த கடத்தலுக்கு அவர் ISI முகவர்களுடன் தொடர்பு கொண்டார் எனவும், பின்னர் அவர் பாகிஸ்தானிய முகமைக்கு பணியாற்றி இந்தியாவின் முக்கியமான ரகசிய தகவல்களை வழங்க ஆரம்பித்தார் என்றும் தெரிகிறது..
சந்தேக நபர் பாகிஸ்தானில் உள்ள ISI முகவர்களுக்கு இந்திய சிம் கார்டுகளை வழங்கியதாகவும், அது மட்டும் அல்லாமல், உத்தர் பிரதேசம், ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி, ISIக்கு பணியாற்ற உதவியுள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்திய சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தானில் உள்ள ISI முகவர்களுக்கு வழங்கியது, இந்தியாவுக்கு எதிரான ரகசிய துரோக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியதற்கு ISI அவருக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கைதான பிறகு, ஷாஹ்சாத் சட்டப்பூர்வ முறையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார், மேலும் விசாரணைகள் தொடர்கின்றன. அவருக்கு எதிராக தொடர்புடைய சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஷாஹ்சாத் செயல்பாடுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, மேலும் புதிய விவரங்கள் வெளிவர இருப்பதாகவும், ஷாஹ்சாத் நெட்வொர்க்கின் பரிணாமம் மற்றும் அவரது செயல்களில் ஈடுபாடு எவ்வளவு என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.