கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் ஒன்றாக வெளியானது. அதன்படி நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வெளியானது. மேலும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்டரி திரைப்படம் வெளியானது.
மேலும் அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள டீ பிளாக் திரைப்படமும் வெள்ளிக்கிழமை தான் வெளியானது. இந்த நிலையில் டி பிளாக் திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே காணப்பட்டது.
இதற்கு முன்னதாக அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும் அவரது சினிமா வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாக மாறியது.
அதற்கு பின்னர் அவர்கள் ரசிகர்களும் அதிகரித்தனர் திரைப்படம் டிமான்டி காலனி போல் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெருத்த ஏமாற்றம் அளித்ததாக ரசிகர்கள் மற்றும் படத்தை பார்த்தவர்கள் கருத்தினை கூறியுள்ளனர்.
மேலும் இந்த படத்தினை பார்த்து பயப்படுபவர்கள் கண்டிப்பாக கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படுபவர்கள் தான் என்று ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் பலரின் விமர்சனங்கள் பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.