பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும். அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்தது.
அதன்படி யானை, டி ப்ளாக் மற்றும் ராக்கெட்டரி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் ராக்கெட்டரி திரைப்படம் ஒரு அறிவியல் பூர்வமான திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தினை பற்றிய விமர்சனங்கள் வரிசையாக ஒவ்வொரு யூடியூப் சேனல்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. படத்திற்கு நல்லவிதமான கருத்தினை கொடுத்துக் கொண்டு வருவதாக தெரிகிறது.
அந்த படி படத்தின் முதல் பாகம் ஸ்லோவாக இருந்தாலும் இரண்டாவது பாகம் மிகவும் விறுவிறுப்பாக சென்றதாகவும் கூறினர். மேலும் கட்டாயம் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கெஞ்சியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததாக காணப்படுகிறது.
ஏனென்றால் திரையரங்கில் வெறும் 30 பேர் மட்டுமே இந்த படத்தை பார்க்கிறார்கள் என்றும் தயவு செய்து இதை பார்க்க வேண்டும் என்று அவர் பேட்டி கொடுத்துள்ளார். மேலும் அவரின் தொடர்ச்சியான பேட்டிகள் மற்றும் படம் பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் கீழே உள்ள வீடியோவில் கண்டு மகிழலாம்.