கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!

By Bala Siva

Published:

கடந்த 1980களில் மெயின் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தால் காமெடி டிராக்கென தனியாக ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும். இந்த காமெடி டிராக்குகளில் பெரும்பாலும் கவுண்டமணி செந்தில் நடித்திருப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த காமெடி டிராக்குகள் எழுதுவதற்காகவே திரையுலகில் சில எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஏ.வீரப்பன்.

கவுண்டமணி செந்தில் நடித்த பல திரைப்படங்களுக்கு எ வீரப்பன் தான்  காமெடி டிராக்குகள் எழுதியுள்ளார்.  குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், உதய கீதம், இதய கோவில், கரகாட்டக்காரன், சின்னத்தம்பி போன்ற படங்களில் அவர் எழுதிய காமெடி டிராக்குகள் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி இவர் எழுதிய தான். இந்த காமெடி டிராக் மூலம் அவர் மிகப்பெரிய புகழ் பெற்றார்.

தமிழ் சினிமாவின் அப்பா நடிகர்.. எஸ்.வி. ரங்காராவ் திரைப்பயணம்..!!

தஞ்சாவூரை சேர்ந்த ஏ வீரப்பன் சிறு வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நாடகங்களில் நடித்த போது அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களில் ஒருவர் தான் சிவாஜி கணேசன். மேலும்  எஸ்.வி சுப்பையா, நம்பியார்,  உள்ளிட்டவர்கள் அவரது நாடக நண்பர்களாக இருந்தனர்.

சிவாஜி கணேசன் என் தங்கை என்ற நாடகத்தில் நடித்த போது பராசக்தி என்ற நாடகத்தில் நடித்தவர் தான் ஏ.வீரப்பன். ஆனால் அதே பராசக்தி திரைப்படமாக உருவானபோது சிவாஜிகணேசன் ஹீரோவானார்.

ஏ வீரப்பன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெனாலிராமன் என்ற திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க தொடங்கிய அவர், படித்தால் மட்டும் போதுமா, பணத்தோட்டம், ஆயிரம் ரூபாய், தாழம்பூ, நாடோடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்ற திரைப்படத்தில் தான் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

3 படங்கள் நடித்தும் பிரபலமாகாத நடிகை… சிவாஜியுடன் இணைந்ததும் குவிந்த ரசிகர்கள்… பத்மப்பிரியாவின் திரை பயணம்..!!

மேலும் சவாலே சமாளி, திருநீலகண்டர், பொன்னூஞ்சல் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அவர் கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதினார். அந்த படத்தில் இந்த சென்னை மாநகரத்திலே, இவ்வளவு குறைந்த வாடகையில் வீடு கொடுப்பவர் நான்தான் என்று கவுண்டமணி கெத்தாக பேசும் வசனம் அவர் எழுதிய தான்.

அதன் பிறகு வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற பெட்ரோமாக்ஸ் காமெடி,  உதயகீதம் படத்தில் இடம்பெற்ற தேங்காயில் குண்டு இருப்பதாக வதந்தி பரப்பும் காமெடி, இதய கோவில் படத்தில் இடம்பெற்ற சலூன் கடை காமெடி, கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி, பேரிச்சம்பழம் காமெடி, சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற மாலைக்கண் நோய் காமெடி என இவர் எழுதிய  காமெடி அனைத்தும் கலக்கலாக இருக்கும்.

மேலும் ஏ வீரப்பன், தெய்வீக ராகங்கள் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

6 வயதில் நடிப்பு.. எம்ஜிஆர் சிவாஜி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்.. ஜோதிலட்சுமியின் வாழ்க்கை பயணம்..!

நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ வீரப்பன் கடந்த 2005 ஆம் ஆண்டு  காலமானார். அவருக்கு பொற்கொடி என்ற மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஏ வீரப்பன் அவர்கள் மறைந்தாலும் அவர் எழுதிய காமெடி டிராக்குகள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருக்கும்.