தமிழ் சினிமாவின் அப்பா நடிகர்.. 34 வயதிலேயே அப்பா கேரக்டருக்கு மாறிய எஸ்.வி.ரங்காராவ்!

1960, 70களில் அப்பா கேரக்டர் என்றால் உடனே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஞாபகம் வருவது எஸ்பி ரங்காராவ் அவர்கள் தான். 34 வயதிலேயே அவர் தனது முதல் அப்பா கேரக்டரை நடித்தவர். அதன் பிறகு தொடர்ச்சியாக சிவாஜி உள்பட பல நடிகர், நடிகைகளுக்கு அப்பாவாக நடித்தார். திரை உலகில் அவரை அப்பா நடிகர் என்றே செல்லமாக அழைத்தார்கள்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் அவர் செய்த திரைப்பட சாதனை மிகப் பெரியது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ராஜா ராணி கதைகள் என்றால் உடனே ரங்காராவை கூப்பிடுங்கள் என்று தான் சொல்வார்கள்.

“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?

sv rengarav

அக்பர், பீஷ்மர், துரியோதனன், ஹரிச்சந்திரன், கம்சன், நரகாசுரன். ராவணன், எமன் என பல சரித்திர கால கேரக்டர்களில் அவர் நடித்துள்ளார். கடந்த 1947ஆம் ஆண்டு பாதாள பைரவி என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் எஸ்வி ரங்காராவ் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பல தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது.

பாதாள பைரவி படத்தில் தான் நடிகை சாவித்திரியும் அறிமுகமானார். என்டி ராமராவ் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் ஒரு நேபாளி கேரக்டரில் ரங்காராவ் நடித்திருப்பார். அதனை அடுத்து அவருக்கு தமிழில் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

மிஸ்ஸியம்மா, மாதர் குல மாணிக்கம் ஆகிய படங்களில் நடித்த அவருக்கு திருப்புமுனையாக வந்தது மாயா பஜார் என்ற படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் இன்றளவும் பிரபலம்.

சிவாஜி – இளையராஜா இணைந்த முதல் படம்.. அதன்பின் என்ன நடந்தது தெரியுமா?

sv ranga rao1

அதன் பிறகு எங்க வீட்டு மகாலட்சுமி, அன்னையின் ஆணை, பொம்மை கல்யாணம், குடும்ப கவுரவம் போன்ற படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ரங்கா ராவுக்கு இரண்டாவது முறையாக இன்னொரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது படிக்காத மேதை. சிவாஜி கணேசன் அப்பாவா நடித்த இந்த படத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். சிவாஜி கணேசனுக்கு இணையாக ரங்கா ராவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதனை அடுத்து விடிவெள்ளி, கப்பலோட்டிய தமிழன்,. குமுதம், பந்த பாசம், படித்தால் மட்டும் போதுமா, தெய்வத்தின் தெய்வம், நிச்சயதாம்பூலம், சாரதா, அன்னை இல்லம், கல்யாணியின் கணவன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். ரங்காராவ் தமிழில் கடைசியாக நடித்த படம் சிவாஜி கணேசன் நடித்த சிவகாமியின் செல்வன். இந்த படம் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியானது.

கடந்த 1952 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தில் நடிகர் எஸ்.வி.ரங்காரா, சாவித்திரிக்கு அப்பாவாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 34 தான். அந்த படத்தில் ஒரு ஜமீன்தாராக சாவித்திரி அப்பாவாக நடித்த நிலையில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதன் பிறகு அவருக்கு ஏராளமான அப்பா கேரக்டர் தான் வந்தது. சிறுவயதில் அப்பா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றாலும் அதையும் அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டது. அதன் பிறகு பல தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு அவர் தொடர்ந்து அப்பாவாகவே நடித்தார்.

ஏவிஎம் நிறுவனத்திற்காக பட ரிலீஸை தள்ளி வைத்த எம்ஜிஆர்.. ஆனால் 20 நாட்களில் ரிலீஸ் செய்ததால் சிக்கல்..!

நடிகர் ரங்காராவ் 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் 1974 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகையே உலுக்கியது. அவரை போன்ற ஒரு அப்பா கேரக்டருக்கு ஆளே இல்லாமல் திரையுலகம் தவித்தது என்று கூறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews