6 வயதில் நடிப்பு.. எம்ஜிஆர் சிவாஜி படங்களில் ஒரு பாடலுக்கு நடனம்.. ஜோதிலட்சுமியின் வாழ்க்கை பயணம்!

தமிழ் சினிமாவில் தற்போது நாயகிகளே ஒரு பாடலுக்கு நடனமாடி வரும் நிலையில் கடந்த 60கள், 70கள் காலத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகள் என ஒரு குரூப் இருந்தது. அவர்களில் ஒருவர் தான் நடிகை ஜோதிலட்சுமி.

நடிகை ஜோதிலட்சுமி கடந்த 1963 ஆம் ஆண்டு வெளியான வானம்பாடி என்ற திரைப்படத்தில் யாரடி வந்தார் என்னடி செய்தார் என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது முதல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முத்து திரைப்படத்தில் கொக்கு என்ன கொக்கு என்ற பாடல் வரை பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

நடிகை ஜோதிலட்சுமி கவர்ச்சி நடிகை ஜெயமாலினி சகோதரி ஆவார். உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நடித்த ஜோதி மீனாவின் அம்மா ஆவார்.

குரூப் டான்ஸ் முதல் வில்லி வரை…. நடிகை சிஐடி சகுந்தலாவின் திரை பயணம்…!!

jothilakshmi 2

1948 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் தான் ஜோதிலட்சுமி. சிறுவயதிலேயே அவர் தனது பெற்றோருடன் சென்னைக்கு வந்துவிட்டார். இவரது பாட்டி ஒரு பிரபல பாடகி என்பதால் அவருக்கு சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சிறுவயதிலேயே சங்கீதம் நடனம் ஆகியவற்றை அவர் முறையாக கற்றுக் கொண்டார் ஜோதிலட்சுமி. பழம்பெறும் நடிகையான டிஆர் ராஜகுமாரி மற்றும் அவரது சகோதரர் டிஆர் ராமண்ணா ஆகியோர்களின் நெருங்கிய உறவினர்தான் ஜோதிலட்சுமி என்பது பலரும் அறியாத தகவல்.

சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர்  இணைந்து நடித்த கூண்டுக்கிளி என்ற திரைப்படத்தில் தான் நடிகை ஜோதிலட்சுமி ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் அவர் நடனமாடும் நங்கைகளில் ஒருவராக நடித்திருப்பார். இவரது முதல் படமே நடனமாடும் படமாக அமைந்த நிலையில் கடைசி வரை அவர் நடனமாடும் காட்சிகளில் தான் நடித்தார்.

கூண்டுக்கிளி படத்திற்கு பிறகு அவர் வானம்பாடி, பெரிய இடத்துப் பெண், பட்டணத்தில் பூதம், கலாட்டா கல்யாணம், தேடி வந்த மாப்பிள்ளை, நீரும் நெருப்பும், ரிக்ஷாக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

கேபரே நடனத்தால் புகழ் பெற்றவர்.. சல்மான்கான் அப்பாவுடன் திருமணம்.. நடிகை ஹெலன் வாழ்க்கைப்பாதை..!

jothilakshmi 1

எம்ஜிஆர் தான் இவருக்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு  குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளை கொடுத்தார். அந்த வாய்ப்பை ஜோதிலட்சுமி சரியாக பயன்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த ஜோதிலட்சுமியை மணிரத்னம் தனது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான நாயகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். அதன் பிறகு ரஜினிகாந்த நடித்த முத்து, மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி, பாலா இயக்கத்தில் உருவான சேது ஆகிய படங்களில் நடனமாடினார். குறிப்பாக சேது படத்தில் இடம்பெற்ற கானக் கருங்குயிலே என்ற பாடலுக்கு ஜோதிலட்சுமி நடனமாடியது இன்றும் பலரது நினைவில் இருக்கும்.

சேது படத்தின் வெற்றிக்கு பின்னர் ஓரளவுக்கு அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக மிடில் கிளாஸ் மாதவன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சண்டை, ஜகன்மோகினி, கோழி கூவுது, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, திரிஷா இல்லனா நயன்தாரா, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடனமாடினார்.

ஜீவா நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படம் தான் ஜோதிலட்சுமி நடித்த கடைசி படம். கவர்ச்சியான பாடல்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில படங்களில் அவர் காமெடி நடிகையாகவும் நடித்திருப்பார். அவரது நடிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

தமிழில் மட்டும் 130 படங்களில் நடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வேலன், அண்ணாமலை, ராஜேஸ்வரி, வசந்தம் போன்ற சீரியல்களில் நடித்தார். குறிப்பாக வள்ளி சீரியலில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஆகஸ்ட் 8ஆம் தேதி காலமானார்.

விபத்தில் கால் இழந்தாலும் நடனக்கலையில் சாதனை.. திரையுலகிலும் சாதனை செய்த நடிகை..!

எம்ஜிஆர், என்டி ராமராவ், ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. நடிகை ஜோதிலட்சுமி தெலுங்கு ஒளிப்பதிவாளர் சாய் பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜோதி மீனா என்ற மகள் இருக்கிறார். அவர் பல தி்ரைப்படங்களில் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...