எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. 400 படங்களுக்கும் மேல் நடித்த டைப்பிஸ்ட் கோபு ..!

Published:

எம்ஜிஆர் படம் முதல் விஜய் படம் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் தான் டைப்பிஸ்ட் கோபி. இவர் ஒரு நாடகத்தில் டைப்பிஸ்ட் கேரக்டரில் நடித்த நிலையில் இவரது பெயர் டைப்பிஸ்ட் கோபி என உருவானது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே மணக்கால் என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தந்தையுடன் சென்னைக்கு வந்தார்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த நிலையில் அவர் பல நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் நடித்தார். சென்னையில் உள்ள சபாக்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நாகேஷ் உடன் நட்பு கிடைத்ததை அடுத்து அவருடைய நாடக வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

எம்ஜிஆர்- சிவாஜி, கமல்-ரஜினி.. இரு தலைமுறை நடிகர்களுக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்..!

நாகேஷ் உடன் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். மிஸ் மைதிலி, கைராசி உள்பட பல நாடகங்கள் சென்னையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தேடி தந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நெஞ்சே நீ வாழ்க என்ற நகைச்சுவை நாடகத்தில் இவர் டைப்பிஸ்ட் வேடத்தில் நடித்தார்.

ஒவ்வொரு ஆபீசிலும் ஒரு டைப்பிஸ்ட் இருப்பார், நம்முடைய நாடகத்திலும் டைப்பிஸ்ட் கேரக்டர் வேண்டும் என்று இவருக்கு டைப்பிஸ்ட் கேரக்டர் கொடுக்கப்பட்டது. இந்த கேரக்டரில் இவர் நடித்ததால் தான் இவரது பெயரே டைப்பிஸ்ட் கோபு என்று மாறிவிட்டது. இந்த நிலையில் தான் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான நாணல் என்ற திரைப்படத்தில் திரைப்பட நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ.. தெலுங்கில் காமெடி நடிகர்… சுதாகர் கடந்து வந்த திரை வாழ்க்கை..!!

இதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன், விஜய் உள்பட 3 தலைமுறை நடிகர்களுடன் இவர் சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சினிமாவில் நடித்த போதும் இவர் நாடகத்தை கைவிடவில்லை.

ஒய்ஜி மகேந்திரன் நாடக குழுவில் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு சென்று நாடகங்கள் நடித்துள்ளார். நடிகர் டைப்பிஸ்ட் கோபுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஜெயசீதா உள்ளனர். இவர் தனது வருமானத்தின் பெரும் பகுதியை தனது மகனின் மருத்துவ செலவுக்காக செலவழித்தார்.

20 வயதில் ரூ.400ஐ பாக்கெட் மணியாக பெற்ற நடிகர்…! ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர்..! யார் யார்..?!

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடரிலும் இவர் நடித்துள்ளார். வசூல் சக்கரவர்த்தி, வீட்டுக்கு வீடு லூட்டி உள்பட ஒரு சில சீரியல்களில் இவர் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களிலும் நடித்த டைப்பிஸ்ட் கோபுயை திரை உலக ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

மேலும் உங்களுக்காக...