3 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த லூஸ் மோகன்.. மெட்ராஸ் பாஷையில் கலக்கிய நடிகர்..!!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த நடிகர் லூஸ் மோகன் தனது முதல் படத்திற்கு வெறும் மூன்று ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.  காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லூஸ் மோகன் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். காஞ்சிபுரத்தில் பிறந்தாலும் இவர் மெட்ராஸ் பாஷை காரணமாக தான் சின்ன வயதிலேயே நண்பர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

லூஸ் மோகன் தந்தை ஒரு நாடக மற்றும் சினிமா நடிகர். அவர் சினிமாவில் நடித்த பணம் குடும்பத்தை நடத்த போதவில்லை என்பதால் சொந்தமாக நாடகமும் நடத்தி வந்தார். தந்தையை பார்த்து தான் லூஸ் மோகனுக்கும் சினிமாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அவரது தந்தை தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.

சென்னை மயிலாப்பூரில் தங்கி தமிழ் திரை உலகில் வாய்ப்புகளை கேட்டார். இந்த நிலையில் லூஸ் மோகனுக்கும் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்கள் கிடைத்தது. சிவாஜிகணேசன் நடித்த நீலவானம் என்ற திரைப்படத்தில் தான் அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் காமெடி கேரக்டர் கிடைத்தது.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

loose mohan1

தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் கேரக்டரில் சிவாஜி நடிக்க, அவரிடம் தனது குடும்ப நபர்களின் எண்ணிக்கையை காமெடியாக சொல்லும் காட்சி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும். முதலில் அவர் தனக்கு அஞ்சு பொண்டாட்டி ஒரு பிள்ளை என்று கூறிவிட்டு அதன் பிறகு சுதாரித்து அஞ்சு குழந்தைகள் ஒரு பொண்டாட்டி என்று மாற்றி மாற்றி கூறுவார்.

இந்த காமெடியால் ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சிவாஜி கணேசனுடன் எங்க ஊர் ராஜா, அன்பளிப்பு, போன்ற படங்களிலும், அதேபோல் ஜெமினி கணேசன் நடித்த கட்டிலா தொட்டிலா, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடித்த அக்கரை பச்சை ஆகிய படங்களில் லூஸ் மோகனுக்கு நல்ல கேரக்டர்கள் கொடுக்கப்பட்டது.

எம்ஜிஆர் நடித்த நீதிக்கு தலைவணங்கு, நவரத்தினம், மீனவ நண்பன் ஆகிய படங்களிலும் லூஸ் மோகன் நடித்தார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கிட்டத்தட்ட 1000 படங்கள் நடித்திருந்தார். இருப்பினும் அவரது திறமைக்கேற்ற வேடங்கள் யாரும் கொடுக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது.

கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?

loose mohan

மெட்ராஸ் பாஷையில் பேசி கலக்கிய அவரை ஒரு முழுமையான நடிகராக தமிழ் திரையுலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சோகம். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, சிவகுமார், ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தார்

அதேபோல் தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், நாகேஷ், கவுண்டமணி போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்தார். இவருக்கு பலமாக இருந்த மெட்ராஸ் பாஷையே ஒரு கட்டத்தில் இவருக்கு பலவீனமாகவும் மாறியதால் அவருக்கு  ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சாவித்திரிக்கு – சரோஜாதேவிக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா… என்ன நடந்தது தெரியுமா?

தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவான அழகி என்ற திரைப்படத்தில் நடித்த லூஸ் மோகனுக்கு அதுவே அவரது கடைசி படமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது மெட்ராஸ் பாஷை நடிப்பு, பாடி லாங்குவேஜ் ரசிகர்களை என்றும் மறக்காமல் வைத்திருக்கும்.