நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!

Published:

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமீன்தாரின் மகன் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை சோமுத்தேவர் ஜமீன்தாராக இருந்தார். அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் என்றும் அவருக்கு அந்த அளவுக்கு மதிப்பு இருந்தது என்றும் கூறப்படுகிறது.

நடிப்பின் நாயகி, நாட்டிய பேரொளி பத்மினியின் அபூர்வ தகவல்கள்..

ms baskar2

சோமு தேவர், எம்ஜிஆர் கருணாநிதி உட்பட பல அரசியல்வாதிகளுடன் நட்பில் இருந்தார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் சோமு தேவரின் மகனான எம்.எஸ்.பாஸ்கர் நாகப்பட்டினத்தில் பள்ளியில் படிக்கும்போதே நாடகத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு என்பது ரத்தத்திலேயே ஊறி இருந்தது.

இதனை அடுத்து 1971-ல் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த கூடிய ஒரே நபர் சோமுத்தேவர் தான் என்று இரு தரப்பினர் விரும்பியதாகவும், இதனை அடுத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

ms baskar 1

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சோமு தேவர் தனது குடும்பத்துடன் சென்னையில் செட்டிலானார். சென்னை பச்சையப்பா கல்லூரியில்தான் எம்.எஸ்.பாஸ்கர் பட்டப்படிப்பு படித்தார். எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு சகோதரிகளும் டப்பிங் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தனது சகோதரியுடன் டப்பிங் செய்யும் ஸ்டூடியோவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சென்றபோதுதான் ஆண் குரலுக்கு டப்பிங் கொடுக்க வந்தவர் வரவில்லை என்பது தெரிய வந்தது. அப்போது எம்.எஸ்.பாஸ்கரை டப்பிங் குரல் கொடுக்க கூறிய போது அவர் ஒரே டேக்கில் அனைத்தையும் டப்பிங் செய்து முடித்ததை பார்த்து டப்பிங் கலைஞர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனை அடுத்து அவருக்கு முதல் சம்பளமாக ரூபாய் 25 கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் பல படங்களில் டப்பிங் பேசினார். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்யும் போது நகைச்சுவை கேரக்டர்களுக்கு பெரும்பாலும் எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்திருப்பார்.

ms baskar1

டப்பிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் எல்ஐசியில் வேலை பார்த்தார். ஒரு பக்கம் நாடகத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருந்தார்.

விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு பல திரைப்படங்களில் அவர் காமெடி கேரக்டரில் நடித்தார்.

அப்போது அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில் பட்டாபி என்ற கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

எம்ஜிஆருக்கே விட்டு கொடுத்தவர்.. எம்ஜிஆரையே பகைத்தும் கொண்டவர்.. நடிகர் ஜெய்சங்கர் குறித்த அறியாத உண்மைகள்..!

காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் அவர் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ’சிவகாசி’ படத்தில் காமெடி வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு மிகச் சிறந்த குணசித்திர நடிகர் என்பதை நிரூபித்த படம் என்றால் ’உத்தம வில்லன்’ தான். கமல்ஹாசனுக்கு இணையாக அந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். கமல்ஹாசனே அவரை பாராட்டியதாகவும் கூறப்பட்டது.

ms baskar3

எம்.எஸ்.பாஸ்கர் தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் ஒரு டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ’96’ திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்காக முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

50 வருடங்கள் ஆகியும் மறக்க முடியாத படம்.. தமிழ் சினிமாவின் புரட்சி ‘அவள் ஒரு தொடர்கதை’

ஜமீன்தாரின் மகனாக இருந்தாலும் எந்த விதமான ஆடம்பரமும் இன்றி அவர் சாதாரணமாக இருப்பதுதான் எம்.எஸ்.பாஸ்கரின் சிறப்பு. அதேபோல் அவருடைய குடும்பத்தினரும் மிக எளிமையாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...