இந்தப் பொருட்கள் உங்க கைப்பை ல இருக்கா? அப்போ கவலை வேண்டாம் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளலாம்.. சில முக்கிய தற்காப்பு உபகரணங்கள்!

Published:

தற்காப்பு உபகரணம் என்பது ஏதேனும் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் பிறரின் உதவி பெற முடியாத நிலையில் இருந்தால் தங்களை தாங்களே காத்துக் கொள்ள உதவும் சில கருவிகள் ஆகும். என்னதான் அறிவியல், நாகரீகம், கல்வி என அனைத்திலும் வளர்ச்சி பெற்று வந்தாலும் நாளுக்கு நாள் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.‌ எந்நேரமும் பிறரையே சார்ந்தும் இருப்பது என்பது இயலாத காரியம். எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

இதற்காக பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. அவற்றை மொபைலில் பதிவிறக்கம் செய்தும் வைத்துக் கொள்ளலாம். அடிப்படையான சில தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்துக் கொள்ளுதலும் நல்லது.

leather craft 3727996 1280

வேலை முடிந்து இரவு நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பும் நபர்கள், நெடுந்தூரம் பயணித்து டியூஷன் வகுப்புகள் சிறப்பு வகுப்புகள் செல்வோர், வீட்டில் தனியாக இருக்கும் நபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு கலைகள் தெரியாவிட்டாலும் இந்த தற்காப்பு உபகரணங்களின் பயன்பாடுகளை பற்றி தெரிந்து கொண்டு இவைகளில் சிலவற்றை கைப்பையில் வைத்திருத்தல் நலம்.

1. பெப்பர் ஸ்ப்ரே:

istockphoto 1344786170 612x612 1

பெப்பர் ஸ்ப்ரே என்பது பொதுவாக பலரும் நன்கு அறிந்த ஒரு தற்காப்பு உபகரணம். எதிராளியை தொலைவில் இருந்தே தாக்கி உங்களை காத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இப்பொழுது துப்பாக்கி வடிவிலும் உள்ளன.

எளிமையாக எடை குறைந்த கையாள்வதற்கு வசதியான பல பெப்பர் ஸ்பிரேக்கள் ஆன்லைனிலும் சந்தைகளிலும் நிறைய கிடைக்கின்றன.

2. தற்காப்பு சாவிக்கொத்து:

images 2 28

பூனையின் காது வடிவம் போன்ற கீ செயின்கள், கத்தி போன்ற கீ செயின்கள் என பல கீ செயின்கள் தற்காப்புக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவை பார்ப்பதற்கு அழகாக ஒரு சாதாரண கீ செயின் போன்று தோன்றினாலும் தற்காப்புக்கு மிகவும் பெரிய அளவில் உதவி புரிகின்றன இந்த கீ செயின்கள்.

3. நுண்ணிய கத்தி உடைய மோதிரம்:

images 2 25

கையில் அணிந்திருக்கும் பொழுது சாதாரண மோதிரம் போன்று தோன்றினாலும் கூர்மையான கத்தியை உள்ளடக்கிய தற்காப்புக்கு உதவும் வண்ணம் பல மோதிரங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

இவற்றை கையில் அணிந்து இருந்தால் ஆபத்துக் காலத்தில் பேருதவியாக இருக்கும்.

4. அலாரம்:

images 2 26 images 2 27

கழுத்தில் உள்ள பென்டென்ட் , அல்லது கீ செயினில் அலாரம் பொருத்தப்பட்ட தற்காப்பு உபகரணங்கள் நிறைய உள்ளன.

ஆபத்து காலத்தில் இதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் அதிக அளவிலான சத்தத்தை எழுப்பி அருகில் உள்ளோரை வரவழைத்து விடும்.

5. விசில்:

images 2 29 1

 

சாதாரண விளையாட்டு விசிலை விட எட்டு மடங்கு சத்தம் விடக் கூடிய விசில்கள் உள்ளன. இந்த ஹைப்பர் விசில்கள் சத்தம் இரண்டு மைல் தூரம் வரை கேட்கும்.

தனியாக பயணிப்போர் இதுபோன்ற சத்தமிடும் விசில் கைப்பையில் வைத்திருப்பது நல்லது.

இன்று பல பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களோடு சேர்த்து தற்காப்பு கலைகளையும் பயிற்றுவித்து வருவது ஆறுதல் அளிக்கிறது. பலரும் தற்காப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். எனினும் சில இடங்களில் அதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது அனைவரும் விழிப்புணர்வோடு நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்…!

மேலும் உங்களுக்காக...