நிறைய நடிகர்கள் இறந்ததுக்குக் காரணமே மது தான்…! ரோபோ சங்கரோட இந்த நிலைமைக்குக் காரணம் இதுதான்…!

Published:

நடிகர்கள்ல நிறைய பேரு இறந்ததுக்குக் காரணமே மது தான் என்கிறார் நகைச்சுவை நடிகரும், யூடியூப் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.

ரோபோ சங்கர் தற்போது மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு உடல் மெலிந்து காணப்படுகிறார். இந்த நிலைக்கும் இவர் மது அருந்தியதுதான் காரணம் என்று போட்டு உடைக்கிறார் பயில்வான். இவர் அப்படி யார் யாரை எல்லாம் சொல்கிறார்னு பார்க்கலாமா…

சினிமா உலகில் மட்டுமல்ல… எதற்கெடுத்தாலும், எந்த விழாவாக இருந்தாலும் மது பார்ட்டி தான் பேஷனாகி விட்டது.

Manobala 1 1
Manobala

மனோபாலா பிராந்தி அருந்தியதால் தான் கல்லீரல் கெட்டுப்போனது. இதயமும் கெட்டுப்போனது. மருத்துவமனையில் உயிரிழந்தார். மயில்சாமி எனக்குத் தெரிஞ்சி 40 வருடமா மது அருந்திருக்காரு. அதனால் தான் 80 வயசு வரை இருக்க வேண்டியவரு கொஞ்ச வயசுலேயே உடல் நலம் குறைஞ்சு இறந்துட்டாரு.

Mayilsamy
Mayilsamy

ரோபோ சங்கர் நடனம், காமெடி என அசத்தும் அருமையான கலைஞர். உடல் பூரா பெயிண்ட் பண்ணிட்டு பாடியைத் தனித்தனியாக குலுக்கிக் காட்டுவார். அப்போது கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருந்தார். அவருடைய மனைவியும் டான்ஸ் ஆடுவாங்க. நட்சத்திர கலைவிழாவில் தான் ரோபோ சங்கருக்கும், அவரது மனைவிக்கும் காதல் ஏற்பட்டதுன்னு எனக்குத் தெரியும்.

எத்தனை மணிக்கு புரோகிராம் முடிஞ்சாலும் அத்தனை மணிக்கு மேல அதாவது 12 மணிக்கு மேல மது சாப்பிட்டு விட்டுத்தான் சிக்கன், மட்டன் எக்ஸட்ரா எக்ஸட்ரா சாப்பிடுவாரு. அப்போ 12 மணிக்கு மேல சாப்பிடுற தீவனம் டைஜெஷன் ஆகாது. சாப்பிட்டு அரை மணி நேரத்துல தூங்கிடுவாங்க. டைஜெஷன் ஆகாத உணவு கல்லீரலைப் பாதிக்கும். அது அதிகப்படியான ஸ்ட்ரெஸை எடுக்கும். கல்லீரலை எது பாதிக்குதுன்னா மது மற்றும் அகால நேர சாப்பாடு.

ரோபோ சங்கர் ஓட்டலுக்குப் போனா நான் வெஜ்ஜை ஒரு கை பார்ப்பாருன்னு சொல்வாங்க. அதிலும் சிக்கன் 65, மட்டன் பிரியாணி தான் அதிகமாக சாப்பிடுவாருன்னு நண்பர்கள் சொன்னார்கள். நானும் பார்த்துருக்கேன்.

அதனால அவருக்கு டெஸ்ட் எடுக்கும்போது மஞ்சள் காமாலைன்னு தெரியாமலே போச்சு. ஆறு மாச காலமாகவே இருந்துருக்குன்னு டாக்டர் சொன்னாரு. இப்ப அவரால நிக்க முடியல.

நடிகர்கள் எல்லோரும் ஏன் மது குடிக்கிறாங்கன்னா நாள் முழுக்க நடிக்கிறார்கள். அதுல இருந்து ரிலாக்ஸ் ஆகறதுக்காகத் தான் மது அருந்துகிறார்கள். எனக்கு சினிமா வாய்ப்பு இல்லாம போனதுக்குக் காரணமே மது அருந்தாதது தான். மது அருந்தலைன்னா இயக்குனரோட பழக்க வழக்கம் இல்லாம போயிடுருது.

Robo shankar
Robo shankar

நடிகர், நடிகைகளின் உறவு இல்லாமப் போயிடுது. மது குடித்தால் தான் சினிமா வாய்ப்பு என்ற இக்கட்டான நிலை உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்பதை பெரிய எழுத்துக்களில் போட வேண்டும். இன்றைக்கு இருக்குற நடிகர்களில் சிவக்குமாரைத் தவிர எல்லோரும் மது அருந்துபவர்கள் தான்.

சுருளிராஜன், சந்திரபாபு, முரளின்னு எல்லோருமே மது அருந்தியதால் தான் இறந்தார்கள். ரகுவரன் இறந்ததற்குக் காரணமும் குடி தான். நல்ல நடிகர்கள் எல்லோருமே இந்த உலகை விட்டுப் போனதுக்குக் காரணம் மது போதை தான்.

நடிகர் சங்கமாவது இந்தப் போதைப் பழக்கத்தை மாற்றுவதற்குக் கவுன்சிலிங் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே நடிகர்களுக்கு சொல்கிறேன். தயவு செய்து போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.

மேலும் உங்களுக்காக...