Xiaomi Civi 3 டிஸ்னியின் 100வது ஆண்டு பதிப்பு ஸ்மார்ட்போன்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

Published:

டிஸ்னியின் 100வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தை அடுத்து Xiaomi நிறுவனத்தின் புதிய மாடல் Xiaomi Civi 3 ஆகும்.

டிஸ்னியின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் வெளியிடப்பட்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன் Xiaomi Civi 3 ஆகும். Xiaomi Civi 3 மாடல் மிக்கி மவுஸ் வடிவமைப்பு கொண்டது. சிவப்பு பின்புற பேனல், டிஸ்னி-தீம் வால்பேப்பர்கள், மற்றும் சிறப்பு டிஸ்னி கேமரா ஆகிய தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

Xiaomi Civi 3 டிஸ்னி 100வது ஆண்டுவிழா பதிப்பில் மீடியாடெக் டைமன்சிட்டி 8200-அல்ட்ரா பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது, 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 120Hz அம்சத்துடன் 6.55-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பின்புறத்தில் மூன்று கேமரா மற்றறும் 32MP செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 4500mAh பேட்டரி இருப்பதால், வேகமாக சார்ஜிங் செய்யலாம்.

Xiaomi Civi 3 டிஸ்னி 100வது ஆண்டுவிழா பதிப்பின் விலை சீனாவில் CNY 2,899 ஆகும்,. மற்ற நாடுகளில் இம்மாடல் இன்னும் வெளியாகவில்லை.

Xiaomi Civi 3 டிஸ்னி 100வது ஆண்டு விழா பதிப்பின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* மிக்கி மவுஸ் வடிவமைப்பு கொண்ட சிவப்பு பின்புற பேனல்
* தனிப்பயன் டிஸ்னி கருப்பொருள் வால்பேப்பர்கள் மற்றும் ஒலிகள்
* சிறப்பு டிஸ்னி கேமரா முறை
* MediaTek Dimensity 8200-Ultra processor
* 12 ஜிபி ரேம்
* 512 ஜிபி சேமிப்பு
* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55-இன்ச் AMOLED டிஸ்ப்ளே
* பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு (50MP பிரதான, 8MP அல்ட்ராவைடு, 2MP மேக்ரோ)
* 32எம்பி முன்பக்க கேமரா
* 4500mAh பேட்டரி 67W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது

நீங்கள் டிஸ்னியின் ரசிகராக இருந்தால் உங்களுக்கு Xiaomi Civi 3 டிஸ்னி 100வது ஆண்டுவிழா பதிப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...