ஷூட்டிங்கில் ரஜினி பண்ண தப்பு.. செருப்பால அடிப்பேன்னு திட்டிய பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்..!!

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார். இதனைத்…

Rajinikanth Balachander

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

என் படத்துக்கு வசனம் எழுதணும்.. போன் பண்ண ரஜினி.. கமலிடம் அனுமதி கேட்ட கிரேசி மோகன்..!!

இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும். திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு பேட்டி ஒன்றில் தான் குடிப்பழக்கத்தை நிறுத்தியது எப்படி என பகிர்ந்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா இணைந்து நடித்த படம் ‘அவர்கள்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று பேக்கப் கூறியதும் வீட்டிற்கு சென்ற ரஜினி மது அருந்தி விட்டார்.

ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிக்கு அழைப்பு வந்துள்ளது. ஒரு ஷாட் எடுக்க வேண்டும் பாலசந்தர் அவர்கள் உடனே வரச் சொன்னார் என்று துணை இயக்குனர் அழைத்துள்ளார். இதனால் ரஜினிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இந்த படம் ஓடுமா.. ரஜினிக்கு வந்த சந்தேகம்.. ரிலீசான அப்புறம் நடந்ததை பார்த்து மனுஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாப்ல..

மது அருந்திவிட்டு எப்படி படப்பிடிப்புக்கு போவது என்று யோசித்தார். பிறகு நன்றாக குடித்துவிட்டு வாசனை திரவியங்களை அடித்து விட்டு சென்றுள்ளார். அப்போதும் பாலச்சந்தர் அருகே சென்று விடக்கூடாது என முடிவுடன் இருந்துள்ளார். ஆனால் ரஜினியின் அருகே வந்த பாலசந்தர் தன்னுடன் அறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ரஜினியும் செல்ல அங்கு பாலசந்தர் ரஜினியிடம் நாகேஷ் பற்றி தெரியுமா என கேட்டுள்ளார். ரஜினியும் தெரியும் என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் தெரியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கும் ரஜினி தெரியும் என்று கூறியுள்ளார். உடனே நாகேஷ் முன்னாடி நீ ஒரு எறும்புக்கு கூட சமமில்லை என்று கூறிவிட்டு தண்ணி அடித்து அவனே அவன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டான்.

பிறந்தநாளுக்கு ரசிகர்களை சந்திக்காத ரஜினி.. இதுதான் காரணம்.. உறுதியாக எடுத்த முடிவு..!!

இனிமேல் ஷூட்டிங்கில் தண்ணீர் அடித்ததாய் கேட்டாலோ பார்த்தாலோ செருப்பால் அடிப்பேன் என கடுமையாக பேசியுள்ளார். அதோடு ரஜினிகாந்த் குடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.