இந்த படம் ஓடுமா.. ரஜினிக்கு வந்த சந்தேகம்.. ரிலீசான அப்புறம் நடந்ததை பார்த்து மனுஷன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாப்ல..

சூப்பர்ஸ்டார் என்ற அரியணையில் கடந்த 48 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருபவர் ரஜினிகாந்த். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி, அதன் பின்னர் மிக குறுகிய காலத்திலேயே சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தையும் பெற்று விட்டார். பேருந்து நடத்துனராக இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட ரஜினி, திரைப்படத்தில் அதையே சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

அவரது நடை, மாஸ் வசனங்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்து போக, அவரை சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தும் அவர்கள் அழகு பார்த்தனர். பல தலைமுறைகளாக புது புது நடிகர்கள் உருவாகிக் கொண்டே இருந்த போதிலும் ரஜினியின் ஸ்டைலின் அருகே கூட யாராலும் நெருங்கி விட முடியவில்லை. அந்த அளவுக்கு தனது பாணியில் தனியாளாக நடை போட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

இத்தனை ஆண்டுகள் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த், விமர்சனங்களை சந்திக்காமல் ஒன்றும் இல்லை. அவரது பல திரைப்படங்கள் தோல்வியடையும் சமயத்தில் ரஜினியின் திரைப்பயணம் முடிந்து விட்டது என்றும் இனி அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் கூட சில திரைப்படங்கள் வெற்றியடையாமல் போனதால் இதற்கு மேலும் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என்று தான் பலரும் குறிப்பிட்டனர். ஆனால் ஜெயிலர் படத்தின் வெற்றி அதற்கு பதிலடி கொடுத்ததுடன் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் நடித்து மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் பற்றி ரஜினிகாந்த் முதலில் நினைத்திருந்ததும் ரிலீசுக்கு பின்னால் அந்த தவறை அவர் உணர்ந்து கொண்டது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருந்தவர் ஆர். சுந்தர்ராஜன். இவர் சத்யராஜ், விஜயகாந்த், சிவகுமார், மோகன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றியும் கண்டுள்ளார். கடைசியாக 2013 ஆம் ஆண்டு ‘சித்திரையில் நிலாச்சோறு’ என்ற படத்தை சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். மேலும் அவர் நிறைய திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

அப்படி இருக்கையில் ரஜினியை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தான் ராஜாதி ராஜா. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாது என சுந்தர்ராஜனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து ரஜினிகாந்த் ஆரம்பத்தில் கருதியதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜாதி ராஜா திரைப்படம் வெளியாகி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மட்டுமல்லாமல் மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாகவும் அமைந்திருந்தது. அப்படி பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் இயக்குனர் சுந்தர்ராஜனை தவறாக எடை போட்டு விட்டதாக பின்னாளில் உணர்ந்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...