பிறந்தநாளுக்கு ரசிகர்களை சந்திக்காத ரஜினி.. இதுதான் காரணம்.. உறுதியாக எடுத்த முடிவு..!!

Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி படத்திற்கு நோ சொன்ன ஷாருக்கான்! அதிரடி முடிவெடுத்த லோகேஷ்!

இதில் ஏராளமான படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ஹிட் படங்கள் ஆகும். திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இவ்வாறு பிரபல நடிகரான ரஜினிகாந்தின் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். ஆனால் தனது பிறந்த நாளன்று ரஜினி எந்த ரசிகரையும் பார்க்க மாட்டார். சில சமயத்தில் வெளிநாட்டிற்கு எங்கேயாவது சென்று விடுவார். ஆனால் அதற்கும் காரணம் உள்ளது என்று ரஜினி அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

ரஜினியின் சைடு வணக்கம்.. இதுதான் காரணம்.. மீசை ராஜேந்திரன் பகிர்ந்த தகவல்!

ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கிய புதிதில் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை பிறந்தநாள் அன்று சந்திப்பதோடு அவர்களுக்கு சாப்பாடு மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். 80 காலகட்டங்களில் ரஜினிகாந்த் உச்சகட்ட நடிகராக இருந்தார்.

அப்போது ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவரைப் பார்ப்பதற்கு ரசிகர் பட்டாளம் திரண்டு விடும். ஆனால் ஒரு முறை இப்படி ரஜினிகாந்தை ஏராளமான ரசிகர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பார்க்க வந்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ரஜினியின் முதல் சினிமா என்ட்ரி.. அபஸ்வரம் டைட்டில் போட்ட பாலச்சந்தர்.. சூப்பர் ஸ்டார் பகிர்ந்த தகவல்!

இது பற்றி தெரியாததும் ரஜினி மிகுந்த வேதனை அடைந்தார். அந்த மூன்று ரசிகர்களின் தாய்மார்களின் கதறல் ரஜினியை இன்னும் துயரத்திற்கு உள்ளாகியது. அன்று ரஜினி ஒரு முடிவை எடுத்தார், பிறந்தநாள் என்றால் யாரையும் சந்திக்கக் கூடாது. முடிந்தால் ஊரில் இல்லை என்று சொல்லிவிட வேண்டும். அன்று முதல் இன்று வரை பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் எந்த ரசிகர்களையும் சந்திப்பதில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.