ஐஸ்வர்யா ரஜினி இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலாக ஆதிக்கம் செலுத்தும் ரஜினி! அப்போ ஹீரோ நிலைமை!

By Velmurugan

Published:

நடிகர் ரஜினி தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்து வருகிறார்.

படத்தில் ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் 62 படத்தின் பூஜைக்கு முன்பே ரிலீஸ் தேதியை புக் பண்ணி வைத்த விக்னேஷ்!

அதை தொடர்ந்து ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு அடுத்ததாக இயக்குநர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ் நடித்த 3 திரைப்படம் இயக்கியவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவை ஹீரோவாக வைத்து நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலாக வந்தாலும் திரையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக வருவதாக கூறப்படுகிறது. அதர்வா படமாக தொடக்கி ரஜினி படாமாஹா முடிந்து விடுமோ என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment