அஜித் 62 படத்தின் பூஜைக்கு முன்பே ரிலீஸ் தேதியை புக் பண்ணி வைத்த விக்னேஷ்!

அஜித் நடிப்பில் தற்போழுது துணிவு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

கடைசி கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது நடிகை மஞ்சு வாரியர் படத்துக்காக டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கிரிக்கெட் வீரர் தோனி எடுக்கும் படத்தில் ஹீரோ , ஹீரோயின் யாரு தெரியுமா? ஷாக்கிங் அப்டேட்!

இந்த படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் திரிஷா விஜய்யின் 67 வது படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

கார்த்தியின் சர்தார் திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் இதோ!

இந்நிலையில் அஜித்தின் 62 வது படம் கோடை விடுமுறைக்கு வரும் என சமூக வலைத்தளங்களில் கருத்து நிலவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.