விஜய்யின் வாரிசு மூலம் கல்லா கட்டும் தில் ராஜு! ரிலீஸ் முன்பே லாபம் மட்டும் இவ்வளவா?

By Velmurugan

Published:

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினி இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலாக ஆதிக்கம் செலுத்தும் ரஜினி! அப்போ ஹீரோ நிலைமை!

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை உரிமையை பூஷன் குமார் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிசு படத்தின் அனைத்து மொழி இசை உரிமையையும் டி சீரிஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

அஜித் 62 படத்தின் பூஜைக்கு முன்பே ரிலீஸ் தேதியை புக் பண்ணி வைத்த விக்னேஷ்!

படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மிகப்பெரிய விலையில் நடைபெற்று வருவதாகவும், தெலுங்கு உரிமையைத் தவிர படத்தின் முழு உரிமையும் ஏற்கனவே 250 கோடிக்கு மதிப்பிட்டுக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே பல கோடி லாபத்தில் இருப்பதாகவும், தெலுங்கில் சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment