சூப்பர் ஸ்டார் டைட்டில் – விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது இந்திய சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வெங்கட் பிரபு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்த தொடக்க காலத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பல போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து தற்போது தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். இவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகின்றது.

படத்திற்கு படம் புது புது சாதனைகள் படைத்து வரும் நிலையில் அதை தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட்டும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படத்திற்க்கு‌ விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி தான் விவாதமாக மாறி உள்ளது. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என சிலர் கூற இது ரஜினி ரசிகர்களை வெகுவாக சீண்டியது.இதை அடுத்து ரஜினி தான் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் பதிலளிக்க இது மோதலாக மாறியது.

மேலும் இந்த மோதலை அதிகரித்த வண்ணம் ஜெயிலர் படத்திலிருந்து ஹைக்கூப் என்ற பாடலை வெளியாகி உள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து வெளியான ஹைக்கூப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பது போல அமைந்துள்ளது. மேலும் பட்டத்தை பறிக்க 100 பேரு என்ற வரிகள் விஜய் ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!

இதை அடுத்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மோதல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த மோதலை தடுக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் ஒரு மேடையில் தான் எப்போதும் தளபதியாகவே இருக்க விரும்புவதாக கூறிய தகவல் தான்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய் இடம் உங்களுக்கு பிடித்த டைட்டில் எது என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன் எனக்கு ரசிகர்கள் வைத்த இளைய தளபதி டைட்டில் தான் வேண்டும்.

சூப்பர் ஸ்டார் டைட்டில் மீது எனக்கு ஆசை இல்லை என கூறியுள்ளார். இதை அடுத்து விஜய் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு ஆசைப்படவில்லை பிறகு ரசிகர்கள் ஏன் மோதலின் ஈடுபட வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews