13 வயதில் 13 குழந்தைகளை காப்பாற்ற நடிக்க வந்தவர்.. சரத்பாபு முதல் மனைவி ரமா பிரபாவின் சோக வாழ்க்கை..!

Published:

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகையாக இருந்த ரமா பிரபா நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை மிகப்பெரிய சோகம் அடங்கியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரமா பிரபா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோருக்கு 13 குழந்தைகள் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் குழந்தைகளை வளர்க்க முடியாமல் திணறினர். இதனை அடுத்து ரமா பிரபாவின் தந்தையின் சகோதரி ஒரு குழந்தையை தான் வளர்ப்பதாக கூற, ஒரு வயதே ஆன ரமா பிரபா அவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!

ரமா பிரபா உடன் அவருடைய அத்தை மற்றும் மாமா ஊட்டிக்கு வந்தனர். அங்கு அவர் தனது அத்தை, மாமாவை, அம்மா, அப்பா என்று நினைத்தே வளர்ந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகள் கழித்து அவர்கள் சென்னைக்கு குடி வந்தனர். அப்போதுதான் அவருடைய மாமா திடீரென காலமானார். இதையடுத்து  ஆந்திராவில் உள்ள உள்ள ரமா பிரபாவின் உண்மையான தந்தையும் காலமானார்.

இந்த நிலையில் அங்கிருந்த 12 குழந்தைகளும் அத்தையை தேடி தஞ்சம் அடைந்தனர். அப்போது ரமா பிரபாவுக்கு 13 வயது. அப்போதுதான் தனது உண்மையான தாய், தந்தை யார் என்பதும் தன்னுடன் பிறந்தவர்கள் 12 பேர்கள் என்பதையும் தெரிந்து கொண்டார். இதையடுத்து தனது சகோதர சகோதரிகளை காப்பாற்றும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது.

இதனை அடுத்து 13 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். முதன்முதலாக ஆர்எஸ் மனோகர் நாடக குழுவில் இணைந்த அவர் அதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜி உட்பட பலரது நாடகங்களில் நடித்தார்.

rama prabha2 1

இந்த நிலையில் தான் அவருக்கு ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை அடுத்து அவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் சிவாஜி கணேசன் நடித்த செல்வம் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது.அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்தார். குறிப்பாக ’வசந்த மாளிகை’ உள்பட பல திரைப்படங்களில் அவர் நாகேஷுக்கு ஜோடியாக நடித்தார்.

புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் அவர் காமெடி நடிகையாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரமா பிரபா ஓரளவு வசதியான உடன் சொந்த படம் எடுக்க முடிவு செய்தார். தமிழில் ’உத்தரவு இன்றி உள்ளே வா’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு உரிமை வாங்கிய அவர் தெலுங்கில் அந்த படத்தை ரீமேக் செய்தார்.

இந்த படத்தில் தான் சரத்பாபு அறிமுகமானார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் நட்பு மற்றும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’உத்தரவு இன்றி உள்ளே வா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியான நிலையில் அந்த படம் படுதோல்வி அடைந்து அவர் கடன்காரராக மாறினார்.

rama prabha1

இதனால் அவர் மிகப்பெரிய வருத்தம் அடைந்த நிலையில் தான் சரத் பாபு அவருக்கு ஆறுதலாக இருந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் சரத்பாபு, ரமா பிரபாவை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இருப்பினும் ரமா பிரபா மனம் தளராது தனது சகோதர சகோதரிக்களுக்காக வாழ்ந்தார். ஒரு வயதில் தான் எப்படி இன்னொரு தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டாரோ அதே போல் அவர் தனது சகோதரியின் ஒரு வயது குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அந்த பெண் குழந்தை தான் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை பின்னால் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்து, வருமானம் குறைந்து வறுமை நிலை காரணமாக அவர் மதுவுக்கு அடிமையானார். கிட்டத்தட்ட சாவித்திரி நிலைமை அவருக்கு இருந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை அதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு மீட்டனர்.

அதன் பிறகு அவர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். சாய்பாபா பக்தையாக தனது சொந்த கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் அவர் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை ரமா பிரபாவுக்கு ஒவ்வொரு மாதமும் பண உதவி செய்தவர் நடிகர் நாகார்ஜுனா என்பதும் குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனாவின் தந்தையும் ரமாவும் அண்ணன் தங்கை போல் பழகியதை அடுத்து தனக்கு சொந்த அத்தைக்கு செய்வது போல் இந்த கடமையை செய்வதாக நாகார்ஜுனா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை..!

தற்போது 75 வயதில் சினிமா வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்து தனது சொந்த கிராமத்தில் நிம்மதியாக தனது இறுதி காலத்தை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...