லோகேஷ் கனகராஜ் சொல்றது சுத்தப்பொய்.. ஆத்திரமடைந்த பிரபாஸ்.. அதிர்ச்சி தகவல்..!

Published:

லோகேஷ் கனகராஜ் சொல்வது சுத்த பொய் என பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’கைதி’, ‘மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், கார்த்தி ஆகிய மூவரும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

1006883 prabhas adipurush 1

அதேபோல் தெலுங்கு பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களும் லோகேஷ் கனகராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாலிவுட்டிலும் சில முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜ் தங்கள் அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த பட நாயகன் பிரபாஸ் என்று செய்திகள் வெளியானது. ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூட இதை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பிரபாஸ் – லோகேஷ் கனகராஜ் இணைவது உறுதி என்றும் பல பத்திரிகைகளில் இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பிரபாஸ், ‘லோகேஷ் கனகராஜ் சொல்வதில் உண்மை இல்லை என்றும் அவருடன் இப்போதைக்கு இணையும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். இதை அவர் கொஞ்சம் ஆத்திரமாக கூறியதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க வாய்ப்பே இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ரஜினியின் அடுத்த படத்தை தான் இயக்க போகிறார் என்றும் அதன் பின்னர் கார்த்தியின் ’கைதி 2’ படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவார் என்றும் எனவே தமிழ் திரையுலகில் அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்களின் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே அவர் 10 படங்கள் இயக்கியவுடன் ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறியுள்ள நிலையில் பிரபாஸ் படத்தை இயக்க வாய்ப்பே இல்லை என்பது தான் தற்போதைய நிலை என்றும் ஒருவேளை எதிர்காலத்தில் இணைய மிகக் குறைந்த வாய்ப்பு இருக்கிறது என்றும் சினிமா உலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் உங்களுக்காக...