12 வயதில் சிவாஜி ரசிகை… சினிமாவே வேண்டாம்… அமெரிக்கா சென்ற நடிகை பிரமிளா..!!

Published:

12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று வெறுத்து போய் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை பிரமிளா 12 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சிவாஜி கணேசன் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தால் அவற்றை வெட்டி தனது நோட்புக்கில் வைத்திருப்பாராம். ஒரு கட்டத்தில் டீச்சர் அதனை பார்த்து விட அவரை பள்ளியில் இருந்து விரட்டி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் அவர் சென்னைக்கு ஒரு திருமணத்திற்காக குடும்பத்தோடு வந்த போது திரைப்பட வாய்ப்பை பெற்றார். முதல் படம் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான வாழையடி வாழை. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது படமாக கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவாகும் அரங்கேற்றம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த படத்தில் அவருக்கு ஒரு பாலியல் தொழிலாளி வேடம் என்றபோது அவரது பெற்றோர் தயங்கினார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் உங்கள் மகள் நிச்சயம் மிகப்பெரிய புகழை பெறுவார், நடிப்புக்காக அவருக்கு பாராட்டு கிடைக்கும் என்று பாலச்சந்தர் உறுதி அளித்ததை தொடர்ந்து  அந்த படத்தில் நடிக்க அனுமதித்தனர்.

பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!

arangetram

பாலச்சந்தர் கூறியபடி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரமிளாவுக்கு வாய்ப்புகளும் குவிந்தன. கோமாதா என் குலமாதா, மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பள்ளிக்காலத்தில் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகையாக இருந்த பிரமிளா தங்கப்பதக்கம் திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்தார்.

அதன் பின்னர் பருவ காலம், உன்னை சுற்றும் உலகம், சதுரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை தன்னுடைய தந்தை தொழில் தொடங்குவதற்காக கொடுத்தார். ஆனால் அவருடைய தந்தை ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில் முடிந்தது. மகளின் பணத்தை நாம் நஷ்டம் ஆக்கிவிட்டோமே என்று மன உளைச்சல் காரணமாகவே அவரது தந்தை மறைந்து விட்டார்.

அதனையடுத்து அவரது தாயார் புதிய தொழில் தொடங்கவும் பிரமிளா பணம் கொடுத்தார். அவருடைய தாயார் தொடங்கிய சுற்றுலா கம்பெனி நிறுவனமும் நஷ்டத்தில் முடிந்தது. தான் சம்பாதித்த 90% பணத்தை அப்பா அம்மாவுக்காகவே கொடுத்து அவர்கள் நஷ்டம் அடைந்ததால் ஒரு கட்டத்தில் பிரமிளா விரக்தி அடைந்தார்.

உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் திடீரென நடிகையான அதிசயம்..‘நெஞ்சத்தை கிள்ளாதே’ வெற்றிக்கதை..!

இந்த நிலையில் தான் அவர் ஜட்ஜ்மெண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்தார். தன்னிடம் மீதமுள்ள பணத்தை வைத்து கடன் வாங்கி இந்த படத்தை தயாரித்துக் கொண்டிருந்த நிலையில்தான் பிரமிளா மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருப்பதை அறிந்த அமெரிக்காவில் இருந்த அவருடைய அண்ணன் தன்னுடன் அமெரிக்கா வந்துவிடுமாறு அழைத்துள்ளார்.

pramila

என்னுடன் அமெரிக்காவுக்கு வா, உனக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல வழியை காண்பிக்கிறேன் என்று அழைத்தார். இதனை அடுத்து அண்ணனின் பேச்சை கேட்டு கொண்ட பிரமிளா இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து தான் தயாரித்த ஜட்ஜ்மெண்ட் என்ற படத்தை அப்படியே இயக்குனரிடம் கொடுத்துவிட்டு தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். நீங்களே இந்த படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அண்ணனுடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.

அதன் பிறகு அமெரிக்காவில் தொழிலதிபர் பால் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் பிரமிளா கணவர் தொழிலை பார்த்து கொண்டு, அவருக்கு உதவியாக தொழில் சம்பந்தப்பட்ட பணிகளை  கவனித்து கொண்டு வருகிறார். சினிமாவில் மீண்டும் தலைகாட்ட மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.

அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்த நடிகை பிரமிளா சினிமாவிலிருந்து சம்பாதித்த ஒரு காசை கூட அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால் இன்று அவர் அமெரிக்காவில் ஒரு பிரபல தொழிலதிபரின் மனைவியாக பணக்கார வீட்டு மருமகளாக இருக்கிறார். திரையுலகம் எத்தனையோ பேரை வாழ வைத்திருந்தாலும் பிரமிளா போன்ற சிலரை வீழ்த்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...