அறிமுகமானது ஒரு பாடல் நடனத்தில்.. அதன்பின் நடிகையாக மாறிய தேவயானி..!

நடிகை தேவயானி முதல்முறையாக ஒரு பாடலில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் குடும்ப கேரக்டரில் நடித்து குடும்ப நடிகையாக மாறினார். அவர் ஒரு பாடலுக்கு நடனமாடிய திரைப்படம் காலதாமதமாக தான் வெளியானது.

தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவர் தேவயானி. இவர் மும்பையைச் சேர்ந்தவர். கடந்த 90களில் இவர் பல தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் நடித்தார். குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

நல்லவேளை ரஜினி படத்துல நடிக்கல.. தப்பிச்சேன்.. நிம்மதி பெருமூச்சு விட்ட நடிகை கிரண்..!

devayani

நடிகை தேவயானி நடித்து வெளியான முதல் படம் ‘தொட்டாசினிங்கி’. பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் ஜோடியாக இந்த படத்தில் தேவயானி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து அவர் அஜித் நடித்த ‘கல்லூரி வாசல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

தேவயானி நடித்து வெளியான முதல் படம் தொட்டாச்சிணுங்கியாக இருந்தாலும் அதற்கு முன்பே அவர் சிவசக்தி என்ற சத்யராஜ் நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இதுதான் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட முதல் படம் என்றாலும் இந்த படம் தொட்டாசிணுங்கி மற்றும் கல்லூரி வாசல் படங்கள் வெளியான பின்னர் தான் வெளியானது.

devayani1

இந்த நிலையில் தேவயானிக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது காதல் கோட்டை. இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி, ஹீரா நடிப்பில் உருவான இந்த படம் முதல் முறையாக பார்க்காமலே காதல் என்ற கான்செப்ட்டை கொண்டு வந்தது.

இது அந்த கால காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகியது. மேலும் இந்த படத்தை சிறப்பாக இயக்கியதற்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது. முதல் முறையாக தமிழ் சினிமா இயக்குனர் ஒருவருக்கு தேசிய விருது பெற்று தந்த படம் இதுதான்.

அது மட்டுமின்றி இந்த படத்தில் சிறப்பாக நடித்த தேவயானிக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது கிடைத்தது. காதல் கோட்டை வெற்றிக்கு பிறகு தேவையானிக்கு பல படங்கள் குவிந்தது. பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்ய வம்சம், கிழக்கும் மேற்கும், சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், மூவேந்தர் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!

இதில் சூரிய வம்சம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதேபோல் பார்த்திபன் நடித்த சொர்ணமுகி, திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனை அடுத்து அவர் மம்முட்டியுடன் நடித்த மறுமலர்ச்சி, கமல்ஹாசனுடன் நடித்த தெனாலி, லிங்குசாமி இயக்கத்தில் உருவான ஆனந்தம், விஜய்யுடன் பிரண்ட்ஸ், கமல்ஹாசனுடன் பஞ்சதந்திரம் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

devayani2

இந்த நிலையில் தான் சூரியவம்சம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அப்படத்தின் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரனை காதலித்தார். தன்னுடைய வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் அவர் தொலைக்காட்சி சீரியல்களில் கவனம் செலுத்தினார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியல் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது. இதில் அபிநயா என்ற கேரக்டரில் கலக்கி இருப்பார்.

தமிழ் சினிமாவின் மரபை உடைத்த ‘விதி’.. இப்படி ஒரு கோர்ட் சீன் எந்த படத்திலும் இல்லை..!

மீண்டும் சன் டிவியில் முத்தாரம், ராசாத்தி போன்ற சீரியல்களிலும், ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களிலும் நடித்தார். தற்போது தனது மகள்களை நடிகையாக்க தேவயானி முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மகள் நடிக்க இருக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விஜய் மகனுக்கு ஜோடியாக தனது மகளை அறிமுகப்படுத்த ஆசைப்படுவதாக ராஜகுமாரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews