காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த கௌதமி! அட இவர்களுக்கும் அதே பிரச்சனையா?

Published:

தமிழ் சினிமாவின் 90ஸ்-களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து கௌதமி, கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகையாகவும், ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகை மாறியுள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரியாலிட்டி சோ தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக நடிகை, சின்னத்திரை நிகழ்ச்சி நடுவர் என எப்போதும் பிசியாக வலம் வரக் கூடியவர். கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

கௌதமியின் குடும்ப வாழ்க்கையை பார்க்கும் போது 1998ம் ஆண்டு சந்திப் பாட்டியா என்னும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு சுபலட்சுமி என்ற மகள் உள்ளார். ஆனால் அடுத்த ஆண்டே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்.

அதை தொடர்ந்து 2004ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உலகநாயகன் கமல்ஹாசனுடன் லிவ்விங்கில் வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு 2016ம் ஆண்டு கமலிடம் இருந்து விலகி தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் கௌதமிக்கு தனது 35வது வயதில் மார்பக புற்று நோய் இருப்பது தெரிய வர, அதில் இருந்து போராடி தற்போது மீண்டு வாழ்ந்து வருகிறார். அதை தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்து வருகிறார் நடிகை கௌதமி.

அடுத்தடுத்து சினிமா, சின்னத்திரை, அரசியல் என பிசியாக இருக்கும் கௌதமி தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதற்கான காரணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

நடிகை கௌதமிக்கு தற்பொழுது சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது கௌதமியிடம் இருந்து 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒருவர் அபகரித்துள்ளதாகவும், ஏமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த புகாரில் நடிகை கௌதமி கூறுவது, தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், குடும்பத்தின் தேவைக்காகவும் அவர் முன்னதாக வாங்கியிருந்த 46 ஏக்கர் நிலத்தை விற்க நினைத்துள்ளார். அந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அழகப்பன் என்பவர் கௌதமியை தொடர்பு கொண்டு நிலத்தை விற்பதற்கு நான் உதவி செய்கிறேன் என கூறியுள்ளார்.

ரஜினியின் 171 வது படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்ன தெரியுமா? அதில் ரஜினிக்கு அப்படி ஒரு கேரக்டரா?

அப்போது கௌதமியும் அழகப்பன் என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நம்பி வந்துள்ளார். அந்த சமயத்தில் கௌதமியிடம் இருந்து பல பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகப்பனை நம்பி ஏமாந்து விட்டதாகவும், இதுவரை அந்த நிலம் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அந்த சொத்தை தனக்கு மீட்டுத் தருமாறு கௌதமி தற்பொழுது காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

திரைத்துறையில் சமீப காலமாகவே நடிகர், நடிகைகளின் சொத்து குறித்த பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...