பொதுவாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகும் நடிகைகளின் முதல் படம் என்பது மறக்க முடியாத படமாக இருக்கும். முதல் படத்தில் அறிமுகமாகும் போது அவர்கள் பல கனவுகளுடன் இருப்பார்கள். முதல் படமே வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கும்.
ஆனால் நடிகை பல்லவி தமிழ் திரை உலகில் ஒரே நேரத்தில் இரு திரைப்படங்களில் அறிமுகமானார். அந்த இரு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி வெளியான பிரபு நடித்த அறுவடை நாள் மற்றும் விஜயகாந்த் நடித்த தர்மதேவதை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிகை பல்லவி அறிமுகமானார்.
சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அறுவடை நாள் திரைப்படத்தில் தான் பல்லவி முதலில் நடிக்க ஒப்பந்தமானார். பிரபு ஜோடியாக பல்லவி நடித்த இந்த படத்தில் பிரபுவின் சகோதரர் ராம்குமாரும் அறிமுகமானார். அதேபோல் விஜயகாந்த் உடன் பல்லவி நடித்த தர்மதேவதை திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.
நடிகை சுஜாதாவை சுற்றியிருந்த மாயவேலி.. கடைசி வரை திரையுலகினர்களுக்கு புரியாத மர்மம்..!
ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பு, விஜயகாந்த் மற்றும் ராதிகாவின் நடிப்பு, பல்லவியின் அறிமுகம் என பல சிறப்பம்சங்கள் இந்த படத்தில் இருந்ததால் இந்த படம் சூப்பர்ஹிட் ஆனது. ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமாகி இரண்டு படங்களுமே ஓரளவு வெற்றி பெற்ற படமாக பல்லவிக்கு அமைந்தது.
அதன் பிறகு அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ரஜினியின் வேலைக்காரன் திரைப்படத்தில் அவர் ரஜினியின் நண்பர் சரத்பாபு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு சகாதேவன் மகாதேவன், உரிமை கீதம், தாயம் ஒன்று, பார்த்தால் பசு, என் தமிழ் என் மக்கள் போன்ற பல படங்களில் நடித்தார்.
பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…
இந்த நிலையில் தான் தன்னுடைய முதல் படமான அறுவடை நாள் இயக்குனரான ஜிஎம் குமாரை அவர் திருமணம் செய்து கொண்டார். நடிகை பல்லவி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பின்னரும் அவர் ஒரு சில படங்களில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு வெளியான கருவறை பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் 2023 ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பௌர்ணமி என்ற படத்தில் நடித்தார்.
பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!
திரைப்படங்களில் மட்டுமின்றி நடிகை பல்லவி சீரியல்களிலும் நடித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான அக்ஷயா, ஆனந்த பவன், சூலம், அகல்விளக்கு, மைடியர் பூதம், மனைவி போன்ற சீரியல்களில் நடித்தார். விஜய் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் மிக அரிதாக ஒரே நாளில் வெளியான இரண்டு படங்களில் அறிமுகமான நடிகை பல்லவி இப்போதும் நல்ல கேரக்டர் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.