பேசும்படம் வந்து 60 வருடங்கள் கழித்தும் எல்லோரையும் பேச வைத்த ஊமைப்படம்…! பிளாக் காமெடிக்கு இதுதான் முன்னோடி..!

Published:

1987ல் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிப்படம் பேசும் படம். புஷ்பக் என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்தப் படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போமா…

ஒரு லாட்ஜ்ல அதுவும் மொட்டைமாடில வறுமையின் கோரப்பிடியில் வேலையில்லா இளைஞனாகத் தங்கியிருப்பார்.டாய்லட் போக முடியாது.டீ குடிக்க முடியாது. பசி.பட்டினி. டிரஸ் மட்டும் டிப் டாப். சாலை ஓரத்தில் பிச்சைக்காரன் போல நிற்பான். பிச்சைக்காரனை விட வறுமையில் இருப்பதாக ஒரு காட்சி. பிச்சைக்காரன் தன் சட்டையில் இருந்து ஆங்காங்கே சில்லரைக் காசுகளை எடுத்துக் காட்டுகிறான். இந்நிலையில் காதல் வேறு அவனது வாழ்க்கையில் ஊடுருவுகிறது.

PP2
PP2

ஸ்டார் ஹோட்டலில் செமயான வாழ்க்கைக் கிடைக்கிறது. இந்நிலையில் கொலைகாரன் துரத்துகிறான். கம்பெனி இன்டர்வியு வரிசையில் தள்ளித் தள்ளிப் போகும் காட்சி. காதலி அமலா நகைக்கடையில் தோடு செலக்ட் செய்யும் காட்சி என படத்தின் அனைத்துக் காட்சிகளும் குறும்படம் போல வெகு அழகாகப் பின்னப்பட்டுள்ளது. நாயகன் படத்தில் கமலைக் கொல்லும் வேடத்தில் நடித்த டினு ஆனந்த் தான் இந்தப் படத்திலும் கமலைக் கொல்ல முயற்சிக்கிறார். அந்த முயற்சி தள்ளித் தள்ளிப் போவது சுவாரசியம்.

pp 1 1
pp

வேலைக்காரப் பெண்மணிக்கும் கண்ணியம் உண்டு என்பதை அழகாக சித்தரித்துள்ளார் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ். வேலையில்லா திண்டாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் இன்னொரு புதுமை படத்தில் யாருக்கும் பேரே கிடையாது. பிளாக் காமெடி என்பது சோகமான சூழலில் ஜாலியாக இருப்பது. இந்தப் படம் தான் அதற்கு முன்னோடி. ஒருவர் இறந்து இருப்பார். அவருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்பாரகள். அந்த நிலையில் நாயகன், நாயகியும் வரிசையில் நின்று கொண்டு ஒருவருக்கொருவர் பார்வையாலேயே காதலித்துக் கொண்டு இருப்பார்கள். எல்.வைத்தியநாதன் இசை… செம. கௌரி சங்கர் ஒளிப்பதிவும் அருமை.

நிஜமான பேசும்படம் வந்து 60 வருடங்கள் கழித்து 1987ல் இந்த ஊமைப்படம் அதுதாங்க பேசும்படம் வருகிறது. படத்தில் தான் யாரும் பேசவில்லையே தவிர அனைவரையும் நின்று பேச வைத்த படம் இதுதான். தற்போதும் பேசும்படமாக இருக்கிறது. அதனால் தான் விரைவில் ரீ ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தின் மொத்த செலவு 35 லட்சம். கர்நாடகாவில் மட்டும் இதன் வசூல் 1 கோடி ரூபாய். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என எல்லா வட மாநிலங்களிலும் இந்தப் படம் வெளியானது. மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற படம். தேசிய, மாநில விருதுகளை வாரிக் குவித்தது.

மேலும் உங்களுக்காக...