யார் பேச்சையும் கேட்கல… ஒரே ஒரு படம் தயாரித்த கஞ்சா கருப்பு… வீட்டை விற்கும் அளவிற்கு ஏற்பட்ட நெருக்கடி..!

Published:

திரை உலகில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் சொந்த படம் எடுத்து நஷ்டமாகி பல வருடங்களாக கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரே படத்தில் விட்ட  பலரை பார்த்திருக்கிறோம். அதனால்தான் திரையுலகில் உள்ளவர்களுக்கு சொந்த படம் எடுக்க வேண்டாம் என்று பலர் அறிவுரை கூறுவார்கள்.

தயாரிப்பு தொழில் என்பது மிகவும் நுட்பமான ஒரு தொழில், கொஞ்சம் ஏமாந்தாலும் பணம் போய்விடும். எனவே தயாரிப்பு தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே சொந்த படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடித்துவிட்டு சம்பளத்தை வாங்கி கொண்டு பேசாமல் போய்விட வேண்டும் என்றுதான் சினிமா ஜாம்பவான்கள் கூறுவது உண்டு.

ஆனாலும் பேராசை காரணமாக சில நடிகர் நடிகைகள் சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டு அதன் பிறகு நடுத்தெருவுக்கு வந்த கதைகளை நாமே ஏராளமாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் பாலாவின் பிதாமகன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு ஒரே ஒரு சொந்த படம் எடுத்ததால் தான் சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த சொத்தையும் இழந்தார். அவரது மனைவி டாக்டர் என்பதால் அதன் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தார்.

கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!

images 48

விக்ரம் மற்றும் சூர்யா நடித்த பிதாமகன் என்ற திரைப்படத்தில் தான் கஞ்சா கருப்பு அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கஞ்சாவை விரும்பி குடிக்கும் கேரக்டரில் நடித்திருந்ததால் அவரது பெயருடன் கஞ்சா ஒட்டிக்கொண்டது. முதல் படமே அவருக்கு சிறப்பான படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தில் நடித்து அசத்திருப்பார்.

அதன் பிறகு விஜய்யுடன் சிவகாசி, விஷாலுடன் சண்டைக்கோழி, அஜித்துடன் திருப்பதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் அவரது காமெடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் இருந்தார்கள்.

2003 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்த நிலையில் தான் அவருக்கு சொந்த படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதுதான் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படம். இந்த படத்தில் மகேஷ் நாயகனாக நடிக்க, கஞ்சா கருப்பு டைட்டில் கேரக்டரான வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தை கோபி என்பவர் இயக்கியிருந்தார்.

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?

images 49

இந்த படத்தை தயாரிக்கும் போது பாலா உள்பட பலர் சொந்த படம் வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் எங்கள் தயாரிப்பாளர் மிகவும் தைரியமானவர், யார் பேச்சையும் கேட்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் ஏற்றிவிட்டதன் காரணமாக அவர் இந்த படத்தை தயாரித்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் ஆசை ஆசையாய் கட்டிய சொந்த வீட்டை விற்றார். தன்னை அறிமுகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பாலா மற்றும் அமீர் ஆகிய இருவரின் பெயரை குறிப்பிடும் வகையில் பாலா அமீர் இல்லம் என்று தனது வீட்டுக்கு பெயர் வைத்திருந்தார். ஆனால் தான் ஆசை ஆசையாக கட்டிய வீட்டை படம் தோல்வி காரணமாக கடனை அடைப்பதற்காக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 20 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டிற்கு சென்றார்.

காமெடி நடிகராகி, அப்துல் கலாம் உதவியாளரானவர்.. ‘ஓட்டேரி நரி’யை ஞாபகம் இருக்கிறதா?

ஆனால் அவரது மனைவி பிசியோதெரபி டாக்டர் என்பதால் அவர் சில காலம் கடனை அடைக்க உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. இதன் பிறகு கஞ்சா கருப்பு மீண்டும் ஒரு சில படங்களில் நடித்து அதன் பிறகு தற்போது தான் மீண்டு வந்து உள்ளார்.

கடந்த ஆண்டு அவர் நான்கு திரைப்படங்களில் நடித்தார். மாமனிதன், நோக்க நோக்க, மஞ்ச குருவி, அருவா சண்டை போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் பிரபல நடிகர்களின் படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் உங்களுக்காக...