நடிகை சுஜாதாவை சுற்றியிருந்த மாயவேலி.. கடைசி வரை திரையுலகினர்களுக்கு புரியாத மர்மம்..!

தமிழ் திரை உலகில் கடந்த 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஜாதா. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுக்கும் நடிகையாக இருந்தவர், திடீரென திருமணம் முடிந்ததும் மாறிவிட்டார். அவரை பார்ப்பதோ அவரிடம் கதை சொல்வதோ அவருடைய கால்ஷீட் பெறுவதோ பெரும் பிரச்சனையாக இருந்தது. அவரை சுத்தி ஒரு மாய வலை இருந்ததாகவும் அந்த வலையில் இருந்து அவர் கடைசிவரை வெளிவரவில்லை என்று கூறப்பட்டது.

சுஜாதா இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்றும் அவரை சுற்றி இருந்த வலைக்கு யார் காரணம் என்பது புரியாத புதிராக தான் இருக்கிறது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுஜாதா சிறுவயதில் இலங்கையில் தான் வாழ்ந்தார். அதன்பின் அவரது குடும்பம் தமிழ்நாடு வந்தது. நடிகை சுஜாதா 15 வயதாக இருக்கும்போதே மலையாள திரைப்படங்களில் நடித்தார். தபஸ்வினி என்ற படம் தான் அவர் அறிமுகமான படம்.

ஆனால் எர்ணாகுளம் ஜங்ஷன் என்ற மலையாள படம் தான் அவரது நடிப்பை வெளிப்படுத்தியது. அப்போதுதான் கே பாலச்சந்தர் தன்னுடைய அவள் ஒரு தொடர்கதை படத்தில் நாயகியாக சுஜாதாவை ஒப்பந்தம் செய்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாத கவிதா என்ற கேரக்டரில் அவர் நடித்தார். இன்றைய பல புரட்சிகரமான பெண்களுக்கு இவர்தான் இன்ஸ்பிரஷன்.

1500-க்கும் மேற்பட்ட படம், 5000-க்கும் மேற்பட்ட நாடகம், 5 முதல்வருடன் நடித்த மறைந்த நடிகை மனோரமா குறித்த பல தகவல்கள்!

sujatha6

இந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து சுஜாதாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். தமிழில் அந்த காலத்தில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த சிவாஜி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், முத்துராமன், தெலுங்கில் நாகேஸ்வர ராவ், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழை விட தெலுங்கில் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

கிட்ட த்தட்ட அவர் நடிக்கும் கேரக்டர் எல்லாமே குடும்பப்பாங்கான, செண்டிமெண்ட் கதையம்சம் கொண்டதாக இருக்கும். இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி திரைப்படத்தின் நாயகி இவர் தான்.  இந்த படம் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. அதேபோல் கமல், ரஜினி இணைந்து நடித்த கே.பாலச்சந்தரின் அவர்கள் உள்பட பல படங்களில் அவர் நடித்தார்.

சிவாஜியுடன் அந்தமான் காதலி. தீர்ப்பு. தீபம். கமல்ஹாசனுடன்  கடல் மீன்கள் ஆகிய படங்களில் நடித்தார், சுஜாதாவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது  விதி திரைப்படம் என்று கூறலாம். இந்த நிலையில் தான் நடிகை சுஜாதா ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திடீரென அவர் திரையுலகினர்களின் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!

sujatha1

இவரை பார்த்து பேசுவதோ, கதை சொல்வதோ கால்ஷீட் கேட்பதோ முடியாத காரியமாக இருந்தது. இவரைச் சுற்றி இருக்கும் அந்த மாய வலைக்கு யார் காரணம் என்பதை சினிமாக்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஒரு கட்டத்தில் இவர் அம்மா கதாபாத்திரங்களில்  நடிக்க தொடங்கினர். அதிலும் மக்களை  நடிப்பில் உருக வைத்தார். சுஜாதாவின் கடைசி படம் அஜித் நடித்த வரலாறு. இதில் நாயகி கனிகாவின் அம்மாவாக நடித்திருப்பார்.

நடிகை சுஜாதா திருமணத்திற்கு பின்னர் வீட்டிலிருந்து படப்பிடிப்பு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நேராக வீடு என்று மட்டுமே அவரது வாழ்க்கை இருந்தது. அவரை வெளியே பார்ப்பது என்பது அரிதாக இருந்தது. சிவாஜி கணேசன் மறைவு தினத்தில் மட்டும் அவர் ஒரே ஒரு நாள் வெளியே வந்தார். அதுவும் மனோரமா கையைப் பிடித்துக் கொண்டு தலைகுனிந்தவாறு அந்த ஊர்வலத்தில் நடந்து சென்றார். ஊர்வலம் முடிந்ததும் நேராக வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் சுஜாதா காலமானார். அப்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருந்ததால் சுஜாதாவின் மரணம் பலரும் அறியாத வகையில் முடிந்துவிட்டது. சுஜாதாவின் மரண செய்தி கேட்டு கமல்ஹாசன், கே. பாலச்சந்தர் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது கமல்ஹாசனிடம் பாலசந்தர், சுஜாதா மிகவும் ஒழுக்கமான பெண், நடிப்பை தவிர வேறு எதுவுமே தெரியாது.

ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!

அவள் ஒரு தொடர்கதை கவிதா கேரக்டருக்கும் சொந்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் யாரிடம் சொல்லாமலே சென்று விட்டார் என்று கூறியதாக தகவல் உண்டு. மொத்தத்தில் ஒரு அருமையான நடிகை திடீரென தனக்கு ஒரு வேலியை போட்டுக்கொண்டு மர்மமாக வாழ்ந்தார் என்றால் அவர் நடிகை சுஜாதா தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews