பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…

அந்த காலத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் என் படத்தில் இவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு, படத்தில் நடித்தார்கள். அப்படி அவர்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட நடிகை சில்க் ஸ்மிதா தான். யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாமதான் என்று ஒருவரை சொன்னால் அது நிச்சயம் சில்க் ஸ்மிதாவிற்கு பொருந்தும்.

தமிழ் சினிமாவில் ஹீரோவை புக் செய்ய தவம் கிடந்த காலங்களில் ஒரு நடிகைக்காக காத்திருந்தார்கள் என்றால் அது சில்க் ஸ்மிதாவிற்காக மட்டுமே.. எண்பதுகளில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார். அப்படிப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா ஒரே ஒரு நடிகரோடு மட்டும் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தார் என்று சொன்னால் நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டே.. எத்தனையோ நடிகர்களோடு நடித்த சில்க் ஸ்மிதா , நடிகர் சத்யராஜ் உடன் முதல் படத்தில் நடிக்க மறுத்தாராம் என்ன காரணம் என்பதை பார்ப்போம்

ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை, நடிகர் வினு சக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்த அந்த விஜயலட்சுமி தான் பின்னாளில் நடிகை சில்க் ஸ்மிதாவாக உயர்ந்தார்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

சில்க் ஸ்மிதா 17 வருடங்கள் சினிமாவில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஸ்மிதா என்கிற புனைப்பெயரில் மலையாளத்தில் அறிமுகமானதால் சில்க் ஸ்மிதா என்றே இவர் தன்னுடைய பெயரை மாற்றி இருந்தார்.

ஜஸ்வர்யாராய்க்கு எப்படி மயக்கும் கண்கள் உள்ளதோ, அதுபோல் கண்களால் மயக்கும் ஒரு நடிகை என்றால் சில்க் ஸ்மிதா தான். அவருக்கென்று அந்த காலத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. எண்பதுகளில் வெளியான கமல், ரஜினி, பிரபு, கார்த்திக் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்திருப்பார்.

ஆனால் அவர் ஒரு நடிகரோடு நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியிருக்கிறார். அவர் நடிகர் சத்யராஜ் தான். நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் கனம் கோட்டார் அவர்களே, என்ற படம். இந்த திரைப்படத்தில் சத்யராஜ் உடன் நீங்கள் நடிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சொல்ல உடனே சில்க் ஸ்மிதா மறுத்துவிட்டாராம்.

தெலுங்கில் சூப்பர்ஹிட், தமிழில் படுதோல்வி அடைந்த ரஜினி படம்.. அதிர்ச்சியான பஞ்சு அருணாசலம் – இளையராஜா!

அவரோடு என்னால் நடிக்க முடியாது. அவருடைய உயரத்தை பாருங்கள் அவருடன் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று சில்க் கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு சத்யராஜின் குடும்ப பின்னணி உள்பட பல விஷயங்களை சொல்லித்தான் அந்த இயக்குனர் சில்க் ஸ்மிதாவை அந்த படத்திற்காக சம்மதிக்க வைத்துள்ளார். சத்யராஜ் பேசும் விதம் பிடித்து போனதால், பின்னாளில் பல படங்களில் சத்யராஜ் உடன் சில்க் ஸ்மிதா நடித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews