மச்சான்ஸ்.. இனி நோ கிளாமர்.. நடிகை நமீதா எடுத்த அதிரடி முடிவு..

Published:

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவையே தனது கிளாமர் நடிப்பால் கட்டிப்போட்டவர்தான் நடிகை நமீதா. இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நடிகை நமீதா. தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, பம்பரக் கண்ணாலே, இங்கிலீஷ் காரன் என பலபடங்களில் நடித்தார்.

மாடலிங்காக தனது வாழ்க்கையைத் துவக்கிய நமீதா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்குகொண்டு இரண்டாம் இடம் பெற்றார். மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமன்றி பிக்பாஸ்,மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்றார்.

ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..

நமீதாவின் கவர்ச்சிக்காகவும் இவர் மச்சான்ஸ் என்று கூப்பிடும் ஸ்டைலுக்காகவே அவருக்கு ரசிகர்கள் பெருகினர். தொடர்ந்து சினிமாவில் முன்னனி நடிகையாகக் கலக்கி வந்த நமீதா வீரேந்திர சௌத்ரி என்பவரை மணம் முடித்து இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார். தற்போது பா.ஜ.க-வில் இணைந்து செயற்பாட்டாளராக இருக்கும் நமீதா நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது என் குழந்தைகளை வளர்ப்பதிலேயே எனது கவனம் முழுக்க இருக்கிறது. இதனால் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தேன். முன்பைப் போல இனி கவர்ச்சியான வேடங்களில் நான் இனி நடிக்கப் போவதில்லை. அனுஷ்கா ஷெட்டி போன்று நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை.

மேலும் வெப்சீரிஸ், சீரியல் போன்றவற்றில் நல்ல ரோல்கள் வந்தால் நடிப்பேன். பெண்களின் முன்னேற்றத்திற்கான பணிகளை ஆயத்தப்படுத்துவேன். செலிபிரிட்டி என்பதை மறந்து எனது குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருக்க விரும்புகிறேன். இரண்டு குழந்தைகளையும் மாறி மாறி பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறினார்.

மேலும் உங்களுக்காக...