ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..

Published:

தமிழ்நாட்டில் பிளக்ஸ் கலாச்சாரம் என்பது தற்போது இன்றியமையாததாகி விட்டது. எப்படி விஷேசங்கள் என்றால் பத்திரிக்கை அச்சிடுகிறோமோ அதே போல் பிளக்ஸ் பேனரும் கட்டாயமாகிவிட்டது. வீட்டிலும், நாட்டிலும், சுற்றுப்புறங்களிலும் தொட்டதற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் இந்த பிளக்ஸ் பிரியர்கள்.

அதிலும் குறிப்பாக பிளக்ஸ் பேனர்களில் சாதியைக் குறிப்பிடும்படி மாஸ் வசனங்கள் எழுதுவது, புகைப்படங்களை பிரபலங்களுடன் இணைத்து மார்பிங் செய்வது என இவர்கள் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய் வருகிறது. பிளக்ஸ் பேனர்களால் விபத்துக்கள் அரங்கேறி சில உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஆடி மாதம் அம்மனுக்கு விஷேச மாதம் என்பதால் அம்மாதம் முழுக்க அம்மன் கோவில்களில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அந்த வகையில் குருவிமலை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு வளையல் திருவிழா நடைபெற்றது.

விமான நிலைய புதிய விதிகள்: இனி இந்தப் பொருட்களை பயணத்தின் போது விமானத்தில் கொண்டு செல்ல முடியாது… மீறினால் அபராதம்…

இதற்காக அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்தான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பிளக்ஸ் பேனரில் அம்மன் அருகில் மியா கலிஃபா இடம்பெற்றிருக்கிறார். மியா கலிஃபாவைத் தெரியாத இளசுகள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு வயது வந்தோருக்கான ஆபாசப் படங்கள் மூலம் பிரபலமானவர். இதனை ஒரு தொழிலாகவே செய்து வருபவர்.

லெபனானில் பிறந்த மியா கலிஃபா அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவர், இருப்பினும் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். மேலும் ஆபாசக் காணொளிகளில் ஹிஜாப் அணிந்து தோன்றியதால் இஸ்லாம் அமைப்புகளின் கடும் கோபத்திற்கும் ஆளானார் மியா கலிஃபா.

உலக அளவில் ஆபாசப் பட இணையதத்தில் அதிக அளவு தேடப்பட்ட நபர்களில் முதன்மையானவராக இருக்கும் மியா கலிஃபா புகைப்படத்தினை அம்மன் அருகில் உள்ளதுபோல டிசைன் செய்து வைக்கப்பட்ட பேனர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த பேனரில் பால்குடம் தலையில் சுமந்து செல்வது போல எடிட் செய்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாது அந்த பேனர் முழுக்க ஆதார் கார்டு வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...