எளிமையான முறையில் நடந்த நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்!

By John A

Published:

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் பொன்னியின் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இடையே இன்று எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமி டகுபதிக்கும் பிறந்தவர்தான் நாக சைதன்யா. அதன்பின் நாகார்ஜுனா அமலாவைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நாகசைதன்யா தெலுங்கு சினிமா உலகில் கால்பதித்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். குறிப்பாக தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகை சமந்தாவிற்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலின் அடையாளாமாக கடந்த 2017-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. தம்பதிகள் இருவரும் 2021-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றனர். அதன்பின் இருவரும் நடிப்பில் பிஸியாகினர். சமந்தாவும் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மச்சான்ஸ்.. இனி நோ கிளாமர்.. நடிகை நமீதா எடுத்த அதிரடி முடிவு..

இந்நிலையில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவின. இருவரும் இணைந்திருந்த போட்டோக்கள் வெளியாகி அதை உறுதி செய்தன. தற்போது இதை மெய்ப்பிக்கும் விதமாக நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது. இதனை நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இருவருக்கும் இடையே இன்று காலை எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நாகார்ஜுனா இருவருக்கும் நிச்சயம் நடந்த புகைப்படத்தினைப் பதிவிட்டு என் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிய துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நிச்சயம் நடைபெற்றதை அறிவிப்பதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். தற்போது நாக சைதன்யா மீனவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் தண்டால் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக...