குடும்பத்தை எதிர்த்து உதவி இயக்குனருடன் திருமணம்.. மாறிபோன தேவிகாவின் வாழ்க்கை!

Published:

நடிகை தேவயானி உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரனை காதலித்து குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் கடந்த 60களில் குடும்ப எதிர்ப்பை மீறி ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்ட நடிகை தான் தேவிகா. நடிகை தேவிகா, சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெமினி கணேசன் என பிரபல நடிகர்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது உதவி இயக்குனர் ஒருவரை காதலித்தார்.

பிரபல இயக்குனர் பீம்சிங்கின்  உதவியாளராக இருந்த தேவதாஸ் என்பவரை தான் அவர் காதலித்தார். தேவிகாவின் வீட்டில் உள்ளவர்கள் யாரும் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனாலும் வீட்டில் உள்ளவர்களை எதிர்த்து கொண்டு உறவினர்களின் எதிர்ப்பை மீறி தேவதாஸை திருமணம் செய்துகொண்டார். தேவதாஸின் தந்தை ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.

தியாகராஜ பாகவதர் நடித்த அசோக்குமார் என்ற படத்தை தயாரித்தது இவர் தான். மகன் தேவதாஸ்க்கு திரைப்படத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவர் சினிமா ரகசியங்களை கற்றுக்கொடுத்தார். பாசமலர் என்ற படத்தில் தேவதாஸ் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். இந்த நிலையில் தான் தேவதாஸ் – தேவிகா இடையே காதல் ஏற்பட்டது.

எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!

devika

முதலில் தேவிகாவை திருமணம் செய்ய தேவதாஸ் தயங்கினார். தான் உதவி இயக்குனர் ஆனால் தேவிகா அப்போது மிகப்பெரிய நடிகை என்பதால் தான் இந்த தயக்கம். ஆனால் தேவிகா தனது காதலில் உறுதியாக இருந்ததை அடுத்து திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தேவதாஸ் தந்தை கூட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் மகனின் ஆசைக்காக இந்த திருமணத்தை அவர் நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் உதவி இயக்குனராக இருந்த கணவரை தேவிகா இயக்குனராக மாற்றினார். வெகுளி பெண் என்ற படத்தின் தயாரிப்பாளரிடம் கணவரை இயக்குனராக பரிந்துரை செய்தார். ஜெமினி கணேசன், தேவிகா நடித்த இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் முத்துராமன் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த மாநில படத்திற்கான தேசிய விருது பெற்றது.

ஜெயலலிதாவை பார்த்து நடுங்கிய ஜெய்சங்கர்! தைரியமாக அழைத்து பேசிய ஜெயலலிதா.. நண்பர்களான அந்த தருணம்..

உதவி இயக்குனராக இருந்த தனது கணவரை, இயக்குனராக்கி அழகு பார்த்தாலும் இந்த திருமண வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கசந்தது. 1990 ஆம் ஆண்டு தேவிகா தனது கணவரை விவாகரத்து செய்தார். தேவதாஸ் – தேவிகா தம்பதிக்கு பிறந்த கனகாவை தேவிகா வளர்த்தார். ஒரு கட்டத்தில் தேவிகா நடிப்பையும் நிறுத்திவிட்டார். தமிழில் அவர் நடித்த கடைசி திரைப்படம் 1986 ஆம் ஆண்டு வெளியான நானும் ஒரு தொழிலாளி என்ற படம் தான்.

devika1 1

கமலஹாசன் அம்பிகா நடித்த இந்த படத்தில் தேவிகா கமல்ஹாசனின் சகோதரியாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு ஒரு சில வாய்ப்புகள் வந்தாலும் அவர் நடிக்க விரும்பாமல் தன்னுடைய மகளுக்காகவே வாழ்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கனகாவின் திரையுலக வாழ்வின் வீழ்ச்சிக்கு தேவிகா தான் காரணம் என்று கூறப்பட்டது.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

தேவிகா இருந்தபோது இருந்த சினிமா வேறு, கனகா காலத்தில் இருந்தபோது உள்ள சினிமா வேறு என்பதை தேவிகா புரிந்து கொள்ளவில்லை. இதனால் தேவிகாவால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் தான் ஒரு கட்டத்தில் திரையுலகினர் கனகாவுக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக தேவிகா மரணம் அடைந்தார்.

மேலும் உங்களுக்காக...