ஜெயலலிதாவை பார்த்து நடுங்கிய ஜெய்சங்கர்! தைரியமாக அழைத்து பேசிய ஜெயலலிதா.. நண்பர்களான அந்த தருணம்..

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி எனும் ஜாம்பவான்கள் நடித்த காலகட்டத்தில் தான் ஜெமினி கணேசன், முத்துராமன் என பலரும் நடித்து வந்தார்கள். ஆனால் இரவும் பகலும் என்ற முதல் படத்திலேயே எல்லோரையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகராக அறிமுகமானவர் தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.

இந்த படம் வெளியான ஆண்டு 1965. இந்த வருடத்தில் இன்னொரு சிறப்பு உண்டு. அது இயக்குனர் ஸ்ரீதரின் வென்னிற ஆடை படத்தின் மூலமாக ஜெயலலிதா அறிமுகமானதும் இதே வருடம் என்பது தான்.

இப்படிப்பட்ட தருணத்தில் தான் 1966 ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ஜெயலலிதா இணைந்து நடிக்கும் வாய்ப்பு நீ என்ற படத்தின் மூலம் அமைந்தது. இதற்கு முந்தைய ஆண்டுதான் எம்ஜிஆர் உடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ஜெயலலிதா பெரும் புகழடைந்ததால் அவருடன் சகஜமாய் பேசி பழகுவதில் ஜெய்சங்கருக்கு சில சங்கடங்கள் இருந்துள்ளது. ஜெயலலிதாவும் அனாவசியமாக யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவர் என்பதனால் படத்தின் காட்சி எடுக்கப்பட்ட அடுத்த நிமிடமே புத்தகம் கையுமாக ஒதுங்கி விடுவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.

இதனால் முதல் நாள் ஒரு சின்ன ஹாய் என்ற பரஸ்பர அறிமுகத்துக்கு பிறகு இருவருமே சகஜமாக பேசவில்லை. சில நாட்கள் இப்படியே சென்ற நேரத்தில் ஜெய்சங்கரை அவ்வப்போது கவனித்த வண்ணம் இருந்துள்ளார் ஜெயலலிதா.

குறிப்பாக படத்துக்கு அவர் அளிக்கும் ஒத்துழைப்பு, யாரிடமும் நாகரிகமாக பழகும் தன்மை, லைட் மேனிற்கு மரியாதை தரும் பண்பு ஆகியவை ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் மீது ஜெயலலிதாவுக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் படப்பிடிப்பில் நாயகன், நாயகி இருவரையும் எதிரிகள் ஓர் அறையில் வைத்து பூட்டி விட அதிலிருந்து இருவரும் தப்பித்து வெளிவரும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஷார்ட் முடிந்ததும் வழக்கம் போல் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தார் ஜெய்சங்கர். அதன் பின் மற்றொரு ஊஞ்சலில் வந்து அமர்ந்த ஜெயலலிதா மிஸ்டர் ஜெய் உங்க படங்களை நான் பார்த்திருக்கிறேன், ரொம்ப நல்லா இருந்தது அதிலும் பஞ்சவர்ணக்கிளி படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் என கூறியுள்ளார்.

உங்கள் நடிப்பு அதிலும் பிரமாதம் என சகஜமாக ஜெய்சங்கருடன் பேச துவங்கினார் ஜெயலலிதா. அதன் பிறகு இருவருக்கிடையும் இருந்த கூச்ச மனநிலை விலகி இயல்பாக பேசத் துவங்கினர். இந்த நட்பு பின்னாளில் ஐந்து படங்களில் இணைந்து நடக்கும் அளவுக்கு இணக்கமாக வளர்ந்தது.

இதன் விளைவு ஒருமுறை தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் பற்றி ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ஜெய்சங்கர் நல்ல கலைஞர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட பல பிடிப்பு தளத்தில் ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருப்பார். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் உடையவர். ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அசாத்திய ஆர்வத்துடன் செயல்பட்டு முழு திறனையும் வெளிப்படுத்தக்கூடிய நபர் என கூறியுள்ளார்.

நயன்தாராவிற்கு முன்பே திருமண வீடியோவை பல கோடிகளுக்கு விற்ற நடிகை புன்னகை அரசி!

மேலும் அனாவசியமான பெருமை கொள்ளும் மனநிலை அவரிடம் கிடையாது. அதே போல மற்றவர்களை பற்றியும் அனாவசியமாக பேசமாட்டார் என உயர்வாக ஜெய்சங்கர் குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும் 1966 சமயத்தில் பொம்மை என்ற சினிமா இதழில் நட்சத்திரம் கண்ட நட்சத்திரம் என்ற தலைப்பில் பிரபலங்களை மற்ற பிரபலங்கள் பேட்டி எடுக்கும் பகுதி வெளி வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் ஜெயலலிதாவை பேட்டி காணும் பிரபலமாக யாரை தேர்ந்தெடுப்பது என மண்டையை பிடித்துக் கொண்டிருந்த அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிற்கு அப்போது ஜெயலலிதா பரிந்துரைத்த பெயர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...