திரை உலகை பொருத்தவரை தனித்துவம் இருந்தால் மட்டுமே ஒரு நடிகர் அல்லது நடிகை நீண்ட காலம் நீடித்திருக்க முடியும். ஒரு சில நடிகர்களின் சாயலில் நடிப்பு இருக்கலாம்,. ஆனால் முழுக்க முழுக்க ஒரு நடிகரை பிரதிபலித்தால் அவருக்கு சில ஆண்டுகளில் தோல்விதான் கிடைக்கும் என்பதற்கு சான்று தான் யோகராஜ் .
பாக்யராஜ் போன்ற ஒரு நகலாக இருந்தவர் தான் யோகராஜ். இவர் பாக்யராஜை முழுக்க முழுக்க பின்பற்றி திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு சில ஆண்டுகளில் திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போனார்.
யோகராஜ் சிறு வயதிலேயே பள்ளி பருவத்திலே கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.
1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!
பள்ளி ஆண்டு விழாவிலும் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளார். அப்போது அவர் கல்லூரிகளில் படிக்கும்போதும் சரி வேலைக்கு சென்றபோதும் சரி பாக்யராஜ் போலவே நடித்து காட்டுவார். பாக்யராஜ் போலவே நடனம் ஆடி காட்டுவார். இவர் நண்பர்கள் பாக்யராஜ் போலவே நீ நடிக்கிறாயே, பாக்யராஜ் போல் நீயும் திரை உலகிற்கு சென்றால் பெரிய ஆளாக வரலாம் என்று கூறினார்கள்.
அதை நம்பி அவர் சென்னை வந்தார். அவருக்கு முதலில் ஊமைக்குயில் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இளவரசி, தேவி பாலா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்த இந்த படத்தில் முழுக்க முழுக்க அவர் பாக்யராஜ் பாணியிலேயே நடித்திருந்தார். அதே கண்ணாடி, அதே நடை, உடை, பாவனை பெயரிலும் கிட்டத்தட்ட ராஜ் என்பதால் பாக்யராஜை பார்த்தது போலவே இவரையும் ரசிகர்கள் பார்த்தனர்.
முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதனை அடுத்து அவருக்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்தது. பாக்யராஜிடம் கால்ஷீட் கிடைக்காமல் ஏமாந்து திரும்பியவர்கள் யோகராஜை வைத்து படம் எடுத்தனர். அவ்வாறு வெளியான திரைப்படம் தான் முந்தானை சபதம். முந்தானை முடிச்சு படத்திற்கு போட்டியாக இந்த படம் கருதப்பட்டது. இந்த படம் சுமாராக ஓடியது.
இதனை அடுத்து சம்சாரமே சரணம், காசு தங்க காசு ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த படங்களிலும் அவர் பாக்யராஜ் பாணியை பின்பற்றினார். அசல் பாக்யராஜின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அசல் பாக்யராஜை ரசிகர்கள் ரசிக்க தொடங்கி போலி பாக்யராஜை தவிர்த்தனர். காசு தங்க காசு படத்திற்கு பிறகு யோகராஜ்க்கு நடிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!
இதனால் அவர் திரையுலகில் இருந்து விலகி விட்டார். பிறகு அவர் என்ன ஆனார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. எம்ஆர் யோகராஜ் நடிப்பில் சிறந்தவராக இருந்தாலும் அவர் பாக்யராஜ் நகல் போல் இல்லாமல் தனித்தன்மையுடன் நடித்திருந்தால் பல ஆண்டுகள் சினிமாவில் நீடித்திருக்கலாம். ஆனால் போலி பாக்யராஜ் போலவே திரையுலகில் வலம் வந்ததால் சில ஆண்டுகளில் அவர் காணாமல் போய்விட்டார்.