தீபாவளியே வேண்டாம் என முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!.. அயலான் ரிலீஸ் தள்ளிப் போக அதுதான் காரணமா?..

Published:

நடிகர் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் திரைப்படத்தை கொடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், தீபாவளிக்கு அயலான் படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் தீபாவளி ரிலீஸில் இருந்து தற்போது பின்வாங்கி உள்ளார். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தற்போது பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

சிவகார்த்திகேயனின் ஆசை:

ஏ ஆர் ரகுமான் இசையில் நடிக்க வேண்டும் என்கிற கனவு பல ஆண்டுகளுக்குப் பிறகு அயலான் படத்தின் மூலம் தான் சிவகார்த்திகேயனுக்கு நிறைவேறியது. ஆனால், அந்த படம் எடுக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரிலீசுக்கு வரவில்லை.

தமிழ் சினிமாவில் சிஜி தொழில்நுட்பத்துடன் ஏலியன் கான்சப்ட் படத்தை அயலான் மூலம் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் கொண்டுவர நினைத்தார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

பல ஆண்டுகள் காத்திருக்கும் ரவிக்குமார்:

இன்று நேற்று நாளை திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அயலான் படத்தின் வாய்ப்பே ரவிக்குமாருக்கு கிடைத்திருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பு காரணமாக நடுவே அந்த படம் கிடப்பில் போடப்பட்டது.

டாக்டர், டான் என வரிசையாக சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றியடைந்த நிலையில் மீண்டும் அயலான் படம் தூசு தட்டப்பட்டு ரெடியானது. இந்த ஆண்டு தீபாவளிக்கு அயலான் திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டு டீசர் உள்ளிட்டவை வெளியிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தீபாவளி ரிலீஸ் கிடையாது என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளி ரிலீஸ் கிடையாது:

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், உடனடியாக தீபாவளிக்கு தனது பிரின்ஸ் படத்தை வெளியிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், பிரின்ஸ் படம் எதிர்பாராத அளவுக்கு படு தோல்வி படமாக மாறியது. இந்நிலையில், இந்த ஆண்டு அயலான் திரைப்படத்தையும் தீபாவளிக்கு வெளியிட்டால் ஒருவேளை அதே ரிசல்ட் வரும் என்கிற பயத்தின் காரணமாகத்தான் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் காரணம்:

ஏலியன் கான்செப்ட் திரைப்படம் என்பதால் ஏகப்பட்ட சிஜி வேலைகள் இன்னமும் பெண்டிங்கில் உள்ள நிலையில்தான் தீபாவளிக்கு படத்தை வெளியிட முடியவில்லை என்றும் பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வரும் என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

இதில், எது உண்மை என்பது படம் வெளியானதும் தெரிந்து விடும். தீபாவளிக்கு சில பெரிய படங்கள் போட்டி காரணமாகவும் ரிலீஸ் தேதியை போட்டியே இல்லாத பொங்கலுக்கு மாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன் என்றும் கூறுகின்றனர்.

மேலும் உங்களுக்காக...