ஒரே ஒரு படம் தயாரித்த தேங்காய் சீனிவாசன்.. ரிலீஸான மூன்றே நடந்த சோகம்!

Published:

தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கமல், ரஜினி ஆகியோரின் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பெட்ரோல் நிலையத்தில் பில் போடுபவராக வேலை பார்த்த அவர், ஒரு கட்டத்தில் நாடகத்தின் மீது எழுந்த ஆசையின் காரணமாக சில நாடகங்களில் நடித்தார். இவருடைய தந்தையும் நாடகங்களில் நடிப்பார் என்பதால் தந்தை முன் தானும் ஒரு மிகப்பெரிய நடிகராக வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தார். அவருக்கு பல நாடகங்கள் கை கொடுத்தன.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

இந்த நிலையில்தான் ‘ஒரு விரல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அவர் ஒரு சிஐடி அதிகாரியாக துப்பறியும் கேரக்டரில் நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

krishnan vandhan

இதனை அடுத்து அவர் ‘வல்லவன் ஒருவன்’, ‘எதிர்நீச்சல்’, ‘ஒளிவிளக்கு’, ‘கண்ணன் என் காதலன்’, ‘நிறைகுடம்’ என எம்ஜிஆர், சிவாஜி என மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்தார். அவருடைய நடிப்புக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பல காமெடி கேரக்டர்களை அவர் தனது வித்தியாசமான நடிப்பால் மெருகேற்றினார்.

காமெடி கேரக்டர்கள் மட்டுமின்றி ஒரு சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்தார். அதேபோல் சில படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘பில்லா’ என்ற திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அஜித் நடித்த பில்லாவில் அந்த கேரக்டர் இல்லாமல் படம் எடுத்தது ஒரு மிகப்பெரிய குறையாக இருந்தது.

42 வயதில் மறைந்து போன மகா கலைஞன் சுருளிராஜன்.. ஒரே வருடத்தில் 55 படங்கள் நடிக்க முடியுமா?

இந்த நிலையில் தேங்காய் சீனிவாசன் தயாரித்த ஒரே ஒரு திரைப்படம் என்றால் அது சிவாஜி கணேசன், மோகன் நடித்த ‘கிருஷ்ணன் வந்தான்’ என்ற திரைப்படம் தான். அவர் எம்ஜிஆரை வைத்து திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்தார், ஆனால் அது முடியாமல் போனது. இதனை அடுத்துதான் சிவாஜி கணேசன் நடித்த ‘கிருஷ்ணன் வந்தான்’ படத்தை தயாரித்தார்.

thengai srinivasan2

சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, மோகன், ரேகா, தேங்காய் சீனிவாசன், நம்பியார், தங்கவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு காமெடி காட்சிகள் இருந்தது. ஓரளவுக்கு இந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் இந்த படம் வெளியான மூன்று மாதத்தில் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.

குபீர் சிரிப்பு குமரிமுத்து.. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாத அற்புத கலைஞன்..!

தேங்காய் சீனிவாசன் நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டார். எம்.ஜி.ஆர், அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தபோது அந்த கட்சியில் அவர் இணைந்தார். அதிமுகவுக்காக அவர் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை பெறுவதற்கு முன்னரே அவர் துரதிஷ்டவசமாக காலமாகிவிட்டார்.

மேலும் உங்களுக்காக...