சினிமாவில் வருவது போல் நிஜ வாழ்விலும் நடந்த பிரிவு : நாக சைதன்யா-சமந்தா பிரிவை அன்றே கணித்த GVM

Published:

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவியான லட்சுமி டகுபதியின் மகன்தான் நாக சைதன்யா. தெலுங்கில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017-ம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். இந்நிலையில் திடீரென சமந்தா நாகசைதன்யாவை கடந்த 2021-ல் விவாகரத்து செய்தார். நாக சைதன்யாவும் இதனை உறுதி செய்த நிலையில் தற்போது இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்கின்றனர்.

சமந்தா தனது சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து அக்கினேனி என்ற பெயரை எடுத்து விட்டார். தற்போது படங்களில் இருவரும் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வாழ்க்கையைப் போலவே சினிமா வந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தெலுங்குப் படம் தான் “ஏ மாய சேசாவே”. தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படமான இதை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருப்பார்.

தற்போது இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு மலையாளி கிறிஸ்டியன் பெண் ஒரு இந்து பையனை காதலித்து அவனை கடைசியில் கல்யாணம் செய்து கொள்வாள். இந்த படத்தின் கதையும் நாக சைதன்யா , சமந்தாவின் உண்மையான வாழ்விலும் அப்படியே நடக்கும்.

அவரு வாழ்க்கைல நான் நுழைஞ்சிருக்கக் கூடாது : 60 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பேட்டி கொடுத்த நடிகை

இதில் தற்செயலான செய்தி என்னவென்றால் சமந்தா நிஜத்திலேயே ஒரு மலையாளி கிறிஸ்டியன் பெண். (அவரின் அம்மா ஒரு மலையாளி கிறிஸ்டியன்) நிஜத்தில் ஒரு தெலுங்கு இந்துவைத் தான் (நாக சைதன்யா) திருமணம் செய்தார். இதை வைத்துப் பார்க்கும்போது “ஏ மாய சேசாவே” படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

மேலும் இந்த படம் தமிழிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கிளைமாக்ஸில் நடிகர்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்வார்கள். நாக சைதன்யா, சமந்தா அவங்களுடைய உண்மையான வாழ்க்கையிலும் இதுதான் நடந்தது.

சைதன்யா + சமந்தா உண்மையான வாழ்க்கை = ஏ மாய சேசாவே + விண்ணைத்தாண்டி வருவாயா கிளைமாக்ஸ். மீண்டும் ஒரு அற்புதமான தற்செயல்.

மேலும் உங்களுக்காக...