கோவாவில் குஷ்புவுடன் விஜய்சேதுபதி!.. கேக்கிற கேள்விக்கெல்லாம் செம சூப்பரா பதில் சொல்லி மடக்கிட்டாரே!..

Published:

54வது சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) கோவாவில் நவம்பர் 20ம் தேதி தொடங்கியது. இந்த விழா கோவாவின் தலைநகரமான பனாஜியில் உள்ள ஷ்யாம பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’காந்தி டாக்ஸ்’ படத்துக்கான ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதில் அதிதி ராவ், அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுவதும் காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவே அங்கே திரையிடப்பட்ட முதல் மெளன மொழித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் விஜய்சேதுபதி – குஷ்பு கலந்துரையாடல்

விஜய் சேதுபதி வெண்ணிலா கபடி கூழு, நான் மகான் அல்ல போன்ற சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் . பின்னர், முதன் முதலில் தென்மெற்க்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சில படம் கைகொடுக்கவில்லை.

பீட்சா, சூது கவ்வும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹப்பி அண்ணாச்சி என்றெல்லாம் நகைச்சுவையாய் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும், நயந்தாரா, தமன்னா போன்ற பல முன்னனி நடிகைகளுடனும் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதியிடம் நடிகை குஷ்பு கேட்ட கேள்விகளுக்கு விஜய்சேதுபதி பதில் அளித்துள்ளார்.இந்த விழாவில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?’ என்று கேட்டதற்க்கு அவர் சினிமா ஒரு அற்புதான மொழி. அதை பார்ப்பவர்களை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்கிறது. அதில் அவர்கள் புதிய அனுபவத்தை அடைகின்றனர்.

நடிக்க எந்த ஃபார்முலாவும் இல்லை

மேலும், மனிதர்களுக்கு கலாசாரத்தையும் , சக மனிதர்களுடன் நடந்துகொள்ளும் விதத்தையும் கற்றுக்கொடுக்கிறது. எனவே, சினிமா ஒரு அருமையான தொழில், அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். நானும் ஒரு நடிகன் என்ற முறையில் சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்து, அனுபவித்து, மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அத்துடன் நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

அடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று வித விதமாக வெரைட்டி காட்டி நடிக்கிறீர்களே எப்படி? என்று கேட்டதற்கு, நடிப்பதற்க்கு எந்த ஃபார்முலாவும் இல்லை, ஒரு கதாபத்திரத்தை கொடுத்து அதற்கான சுதந்திரத்தையும் கொடுத்தால் நடிப்பு தானாக வரும், என்றார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற விஜய்சேதுபதி அதுகுறித்த அனுபவத்தையும் பகிர்ந்த்கொண்டார். மேலும், நடிகை குஷ்புவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...