அவரு வாழ்க்கைல நான் நுழைஞ்சிருக்கக் கூடாது… 60 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக பேட்டி கொடுத்த நடிகை!

தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர நடிகர் நடிகைகள் இருந்தாலும், நடிகை என்ற சாயலே தெரியாமல் ஏதோ நமது பக்கத்து வீட்டுப் பெண் போல் நடித்து குடும்பப் பாங்கான கேரெக்டர் என்றாலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு திரையில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை பிரேமி. தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரான இவரை ஜானி படத்தில் நன்கு அடையாளம் காணலாம். கிட்டத்தட்ட 1000 படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார் பிரேமி.

இதுவரை ஒரு பேட்டிகளில் கூட தனது வாயைத் திறக்காத இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இவரின் காதலர் யாரென்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். ஆம்! தமிழ் சினிமாவின் லெஜண்ட் இயக்குநர் அண்மையில் மறைந்த மகேந்திரன் தான். கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதா..!

அந்தப் பேட்டியில் இயக்குநர் மகேந்திரன் உடனான காதல் குறித்து நடிகை பிரேமி கூறுகையில், “என்னை இயக்குநர் மகேந்திரனிடம் அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் செந்தாமரைதான். நாங்கள் இருவரும் பேசி பழகினோம். அவருக்கு கல்யாணம் ஆனதும் தெரிந்தும் கூட அவரிடம் பழகினேன். அது என் தவறு தான்.

இந்தப் பாட்ட அவங்க தான் பாடனும் : கண்டிஷன் போட்ட இளையராஜா : இன்றும் காதல் கானத்திற்கு பெயர் போன பாடல்

நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. அதற்குரிய தண்டனையை அனுபவித்திருக்கிறேன். ஏழு வருடங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். அதன்பின் அவருக்கு சரிவர பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும், நிதிச்சுமை காரணமாகவும் அவர் முதல் மனைவியிடமே சென்று விட்டார்.

அவர் என்னை விட்டுப் பிரிந்த பின் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். பின் என் அண்ணனுடன் சென்று விட்டேன். எங்களுக்குப் பிறந்த குழந்தையை தனி ஆளாகத் தான் வளர்த்தேன்” இவ்வாறு அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியாகக் கூறினார் பிரேமி.

இவர்களது காதல் பலருக்கும் வியப்பைத் தரலாம். மகேந்திரனுக்கு இன்னொரு குடும்பம் உள்ளதா என சினிமா ரசிகர்கள் இந்தப் பேட்டியைப் பார்த்தபின் ஆச்சர்யப்படுகின்றனர். தற்போது பிரேமி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு இறைப்பணி செய்து வருகிறார். பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் சீரியல்களில் தலைகாட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.