திரையுலகில் மீண்டும் மீண்டும் தோல்வி… நடிகவேளுக்கு எம்ஆர்.ராதா பேரு வந்தது எப்படி?

தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் எம்.ஆர்.ராதா. நாத்திகரான இவர் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். ரத்தக்கண்ணீர் என்ற ஒரு படமே போதும். இது அவரது திரையுலக வாழ்க்கையில் காலத்தால் மறக்க முடியாத…

தமிழ்த்திரை உலகில் நடிகவேள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் எம்.ஆர்.ராதா. நாத்திகரான இவர் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். ரத்தக்கண்ணீர் என்ற ஒரு படமே போதும். இது அவரது திரையுலக வாழ்க்கையில் காலத்தால் மறக்க முடியாத காவியம். வேறு எந்த நடிகராலும் அப்படி நடித்து விட முடியாது. அத்தகைய அபூர்வ திறன் மிக்க எம்ஆர்.ராதாவுக்கு அந்தப் பேரு வந்த கதை எப்படின்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

நடிகவேள் எம்ஆர்.ராதா நடித்த முதல் திரைப்படம் ராஜசேகரன். அது வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்காரணமாகத்தான் மீண்டும் நாடக உலகிற்கு வந்தார். அந்தப் படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் ஒரு சில ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அப்படி கவர்ந்தவர்களில் ஒருவர் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர்.சுந்தரம்.

அவரது தயாரிப்பில் சந்தன தேவன், சத்தியவாணி என்ற 2 திரைப்படங்களில் நடித்தார். இந்த 2 படங்களில் சத்தியவாணி படத்தில் எம்.ஆர்.ராதா தான் கதாநாயகன். ஆனால் என்ன துரதிர்ஷ்டம்னா இந்த 2 படங்களுமே வெற்றிப்படமாக அமையவில்லை.

எப்படி ராஜசேகரன் திரைப்படம் வெற்றியாக அமையாதபோது மீண்டும் நாடக உலகிற்குப் போனாரோ அதே மாதிரி இந்தப் படமும் வெற்றிகரமாக அமையாததால மீண்டும் நாடகம் நடத்தத் தொடங்கினார். மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்ற அவரது பெயரைச் சுருக்கி எம்ஆர்.ராதா என்ற பெயரை சூட்டிய பெருமை டி.ஆர்.சுந்தரத்தையேச் சாரும். மேற்கண்ட தகவலைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.