உன்னால் முடியும் தம்பி.. வாட்ஸ் அப், இன்ஸ்டா வீடியோவை ஒரே நொடியில் எடிட் செய்ய வேண்டுமா? மெட்டாவின் புதிய வசதி..!

x மெட்டா AI அதன் வசதிகளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது, முதன்முறையாக வீடியோ எடிட்டிங் வசதியையும் பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது. மற்ற AI கருவிகளை போலவே, நீங்கள் ஒரு promptஐ…

meta ai

x

மெட்டா AI அதன் வசதிகளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது, முதன்முறையாக வீடியோ எடிட்டிங் வசதியையும் பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது. மற்ற AI கருவிகளை போலவே, நீங்கள் ஒரு promptஐ கொடுத்தால் போதும், அந்த தொழில்நுட்பம் உங்கள் வீடியோ எடிட்டிங் வேலையை செய்து முடிக்கும்.

குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த வீடியோ எடிட்டிங் வசதியை மெட்டா AI தற்போது வழங்குகிறது. ஆனால், விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா AI வீடியோ எடிட்டிங் எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மெட்டா நிறுவனம் கூறும் தகவலின்படி, இந்த வீடியோ எடிட்டிங் கருவி மெட்டா AI இணையதளத்திலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Edits செயலியிலும் கிடைக்கிறது. இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பகிர்வதற்கு முன், அதன் உடை, லொகேஷன் அல்லது லைட்டிங் மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய, AI prompts பட்டியலை மெட்டா உருவாக்கி உள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையான எடிட்டிங்கை தங்கள் prompts கொண்டு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது.

AI வீடியோ எடிட்டிங் கருவி செயல்படும் விதம் குறித்து தற்போது பார்ப்போம்.

நீங்கள் மெட்டா AI செயலி, இணையதளம் அல்லது எடிட்ஸ் செயலியில் ஒரு வீடியோவை பதிவேற்ற வேண்டும்.

அங்குள்ள 50 presetsகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, 10 வினாடி வீடியோவை இலவசமாக எடிட் செய்யலாம்.

மெட்டா AI, உங்கள் வீடியோவை ஒரு கிராஃபிக் நாவலாக அல்லது காமிக் புத்தக சித்திரமாகவும் மாற்றும்.

உங்கள் வீடியோவை ஒரு வீடியோ கேமாக மாற்றவும் மெட்டா AI-யிடம் கேட்கலாம்.

இதுகுறித்து மெட்டா தனது சமூக வலைத்தள பதிவில்”இந்த வசதியை நாங்கள் உருவாக்கியது, அனைவரும் படைப்பு ரீதியாக பரிசோதனை செய்து, தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேடிக்கையான, சுவாரஸ்யமான வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்,” என்று கூறியுள்ளது. இந்த AI எடிட்டிங் கருவி இலவசமாக 10 வினாடிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடியோ வசதியை அமெரிக்காவில் உள்ள பயனர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியும்.

இந்த வசதியை பயன்படுத்தினால் எடிட்டிங் கோர்ஸ் படிக்காமல், எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் ‘உன்னால் முடியும் தம்பி’ பாணியில் யார் வேண்டுமானாலும் வீடியோ எடிட் செய்ய முடியும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.