ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த மோகன்.. நடிகையின் துரோகத்தால் ஜீரோவான பரிதாபம்..!

Published:

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு மிகப்பெரிய அளவில் டஃப் கொடுத்த நடிகர் மோகன், நடிகை ஒருவர் செய்த சூழ்ச்சியால் ஜீரோவாகி போன பரிதாப நிலை குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த மோகன் திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சென்னை வந்தார். வெற்றியடைந்தால் நடிப்பில் தொடர்வோம், இல்லையேல் மீண்டும் வங்கி வேலைக்கு சென்று விடுவோம் என்ற எண்ணத்தில் தான் அவர் திரையுலகுக்கு வந்தார்.

எடை குறைப்பால் ட்ரோல் .. நெகட்டிவ் விமர்சனங்களை மீறி சாதனை செய்யும் கீர்த்தி சுரேஷ்..!

அவர் நினைத்தது போலவே முதல் இரண்டு படங்கள் சுமாராகத்தான் சென்றது. ஆனால் அதன் பின் மூன்றாவது படத்திலிருந்து அவருக்கு வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக அவரது படங்கள் அனைத்தும் மிகச் சிறந்த பாடல்களுடன் அமையும் என்பதால் அவரது படம் வெற்றி பெற ஆரம்பித்தது. அவருடைய வெற்றிக்கு கிட்டத்தட்ட 50% இசைஞானி இளையராஜா தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

mohan13

கமல்ஹாசனுக்கு அடுத்து காதல் மன்னனாக அதிக பெண் ரசிகர்களை கொண்டவர் மோகன் தான். இந்த நிலையில் மோகனின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் அவருக்கு டப்பிங் கொடுத்தவர் தான்.

விஜயின் தாய் மாமா சுரேந்தர் என்பவர் தான் அவருக்கு டப்பிங் கொடுத்தார். அவரது டப்பிங் கீழ் மோகன் படங்கள் மிகச் சிறந்த அளவில் வெற்றி பெற்ற நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மோகன் சொந்த குரலில் பேசினார். ஆனால் அவரது சொந்தக்குரல்  ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

மோகனின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால் கடந்த 1984ஆம் ஆண்டு, ஒரே ஆண்டில் 18 படங்கள் ரிலீஸ் செய்தார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அவர் நடிப்பார் என்றும் தூங்குவதற்கு, குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் அவர் நடித்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. சிவாஜி கணேசனுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது மோகனின் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்தின் சம்பளம் ரூ.1 லட்சம்.. இன்று ரூ.10,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த நடிகை?

மோகன் வளர்ச்சிக்கு இளையராஜாவை அடுத்து இன்னொரு மிகப்பெரிய காரணம் என்றால் அது இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அவரது காதல் படங்கள், இசை சம்பந்தமான படங்கள், மைக் பிடித்து பாடும் காட்சியை கொண்ட படங்கள் தான் மோகனுக்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்தது.

mohan14

இந்த நிலையில் தான் மோகனின் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தபோது அவர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் ’நூறாவது நாள்’. அந்த படத்தில் மோகன் வில்லனாக நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று மிகச் சிறந்த அளவில் கணித்தவர் இயக்குனர் மணிவண்ணன்.

அதன்பிறகு ’விதி’ உட்பட ஒரு சில படங்களில் நெகட்டிவ் வேடங்களில் நடித்தார். ஆடியோ கேசட் விற்பனையில் தமிழகத்திலேயே மிகப்பெரிய சாதனை செய்தது ’விதி’ படத்தின் கேசட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பிரபல  நடிகை ஒருவர் மோகனை ஒருதலையாக காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகையை திருமணம் செய்ய தனக்கு விருப்பமில்லை என நேருக்கு நேராகவே கூறினார்.

இதனை அடுத்து அந்த நடிகை தான் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக பத்திரிகைகள் மூலம் வதந்தியை கிளப்பிவிட்டதாகவும், அதன் பிறகு அவர் திடீரென மோகன் காணாமல் போனார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மோகன் தான் நடித்து சம்பாதித்தை பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். அதனால் அவருக்கு எந்த விதமான பொருளாதார பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வதந்தி காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.

நயன்தாராவை விட பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் செய்த விஜய் பட ஹீரோயின்! கடைசியில் என்ன நடந்தது…

இனிமேல் சினிமாவே வேண்டாம், ரசிகர்களே வேண்டாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த நிலையில் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் மீண்டும் அவர் ஒரு சுற்று தமிழ் திரை உலகில் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...