முதல் படத்தின் சம்பளம் ரூ.1 லட்சம்.. இன்று ரூ.10,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த நடிகை?

அசின் நடித்த கஜினி திரைப்படத்தில் சூர்யா ஒரு தொழிலதிபர் என்று தெரியாமலேயே அவரை காதலிப்பார் என்பதும் அவருக்கு ஜட்டி விளம்பர வாய்ப்பு கூட வாங்கி கொடுப்பார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்று தெரிந்தவுடன் பெரும் அதிர்ச்சி அடைவார், இந்த காட்சி அவரது உண்மையான வாழ்க்கையிலேயே நடந்துள்ளது என்பதுதான் அதிசயமாகும்.

முதல் படத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கின அசின் திருமணம் ஆனவுடன் ரூ.10,000 கோடிக்கு அதிபதியானது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

தாரை தப்பட்டையால் தரைமட்டமான சசிகுமார்.. பாலாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்..!

கேரளாவை சேர்ந்த அசின் கடந்த 2001ஆம் ஆண்டு 20 வயதில் முதல் படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான அசினை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை மோகன் ராஜாவுக்கு தான் உண்டு. ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய க்யூட்டான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தை அடுத்து அவர் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.

asin rahul 1

பொதுவாக நடிகைகளின் மேனேஜர் போல் செயல்படுவது அவர்களது அம்மாவாக தான் இருப்பார்கள். ஆனால் அசினுக்கு அவரது தந்தை ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். கதை முழுவதையும் கேட்டு அதில் அசின் கேரக்டருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை பார்த்து ஆராய்ந்து அதன் பின்னர் தான் அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்.

அப்படி அவர் ஒப்புக்கொண்ட திரைப்படம் தான் ’கஜினி’. கஜினி திரைப்படம் சூர்யாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ அதே அளவுக்கு அசினின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தது. ’கஜினி’ படம் தான் அவரை தமிழின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அதன் பின்னர் அஜித், விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிக்கும் வகையில் அவரது தந்தை பார்த்துக்கொண்டார். குறிப்பாக விக்ரமுடன் மஜா, விஜய் உடன் சிவகாசி, அஜித்துடன் வரலாறு, ஆழ்வார், விஜய்யுடன் மீண்டும் போக்கிரி, சூர்யாவுடன் மீண்டும் வேல் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.

அஜித் விஜய்க்கு இணையான புகழ்.. 2 படங்களை மிஸ் செய்ததால் படுவீழ்ச்சியடைந்த அப்பாஸ்..!

அசினின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது தசாவதாரம் படம் தான். கமல்ஹாசனுக்கு இணையான நடிப்பு மற்றும் வெகுளியான பிராமண பெண்ணாக அந்த படத்தில் அவர் நடித்திருப்பார்.

இந்த நிலையில் அசின் தனது பாலிவுட் திரை உலக நண்பர் அக்ஷய்குமார் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார். அவ்வாறு அக்ஷய்குமார் உடன் பழகிக் கொண்டிருந்த போதுதான் அவரது நண்பர் ராகுல் ஷர்மா என்பவர் அவருக்கு அறிமுகமானார்.

asin rahul1

ஒரு சாதாரண எளிமையான மனிதரைப் போல் ராகுல் சர்மா இருந்தது அசினுக்கு ஆச்சரியத்தை தந்தது. அவருடன் முதலில் நட்பாக பழகிய நிலையில் அதன்பின் காதலாக மாறியது. ஆனால் காதலித்தபோதுதான் அவர் அக்சயகுமாரிடம், ராகுல் சர்மா குறித்து கேட்டபோது அவர் தான் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் என்று கூறியவுடன் அசின் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றார்.

ராகுல் சார்மா மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் என்று கூறியதோடு அவரது பங்குக்கு மட்டும் ரூ.10,000 கோடி இருக்கும் என்று அக்சயகுமார் அசினிடம் கூறினார். இதனை அடுத்து அசின் அதிர்ச்சி அடைந்தார்.

இவ்வளவு பெரிய தொழிலதிபர் தனது காதலை ஏற்றுக்கொள்வாரா என்ற அச்சமும் அவரது மனதில் இருந்தது. ஆனால் ராகுல் சர்மா அசினை மனப்பூர்வமாக விரும்பியதால் அவரே அசின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார் என்பதும் அதன் பின்னர் இரு தரப்பு சம்மதத்துடன் அசினின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசினின் திருமணம் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்தது. அப்போதே அவர் அசினுக்கு திருமண பரிசாக 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை வழங்கியதாகவும் கூறப்பட்டது.

திருமணத்திற்கு பின்னர் அசின் பிடிவாதமாக நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு விஜய், அஜித் உள்பட பல பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு தனது குடும்பம் மட்டுமே முக்கியம் என்று அவர் அனைத்து வாய்ப்பையும் மறுத்து விட்டார்.

மேலும் ராகுல் சர்மாவுக்கு பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் அதில் சில நிறுவனங்களை அசின் கவனித்து வந்ததால் அவரால் நடிப்பு பக்கம் போகவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் சர்மா – அசின் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். தனது மகளின் புகைப்படத்தை அவ்வப்போது அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார்.

எம்ஜிஆரின் லட்சியப் படம் இதுதான்…! திரைக்கதை எழுதியது பிரபல டைரக்டர் ! இது மட்டும் நடந்திருந்தால் அவரது லெவலே வேற..!

சமீபத்தில் கூட அசின் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய போவதாக வதந்திகள் கிளம்பிய நிலையில் அது முழுக்க முழுக்க வதந்தி என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews