எடை குறைப்பால் ட்ரோல் .. நெகட்டிவ் விமர்சனங்களை மீறி சாதனை செய்யும் கீர்த்தி சுரேஷ்..!

பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் ரகசியம் திருமணம் செய்ய இருப்பதாகவும் திரை உலகில் வதந்திகள் பரவி வருகிறது. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் எடையை குறைத்ததால் அவர் கன்றாவியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி இன்றும் தென்னிந்திய திரை உலகில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றால் முழுக்க முழுக்க அது அவரது நடிப்பு திறமையினால் மற்றும் படங்களை தேர்வு செய்வதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாரை தப்பட்டையால் தரைமட்டமான சசிகுமார்.. பாலாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்..!

keerthi-pic

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மேனகா. அவருடைய மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பதும் கீர்த்தி சுரேஷின் தந்தை மலையாள திரை உலகில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூர்வீகம் திருநெல்வேலியாக இருந்தாலும் கேரளாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றோர் செட்டில் ஆனார்கள். கீர்த்தி சுரேஷ் தனது தந்தை தயாரிக்கும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் மலையாள இயக்குனர் பிரியதர்சனின் உதவியாளராக இருந்து அதன் பின் இயக்குனராக மாறிய ஏஎல் விஜய், கீர்த்தி சுரேஷை தனது ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நாயகி ஆக்கினார். ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் கீர்த்தி சுரேஷின் முதல் படம் என்பதும் மட்டுமின்றி ஓரளவு வெற்றியைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthi - 7

ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த ஒரு சில படங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக தனுஷ் உடன் அவர் நடித்த ’தொடரி’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது என்பது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் நடிப்பும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

ஆனால் அவருக்கு அடுத்த படமே விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் பைரவா. அந்த படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷ்க்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததற்கு முக்கிய காரணம் அவர் மீடியாவுடன் இணக்கமாக இருந்தார் என்பதுதான்.

இந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது ‘நடிகையர் திலகம்’ படம் தான். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான இந்த படத்தில் நடிக்க பல நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் கடைசியில் கீர்த்தி சுரேஷ்தான் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த படம் அவருக்கு ஒரு பொக்கிஷம் என்றும் சொல்லலாம். அது மட்டுமின்றி அவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்தது. ’நடிகையர் திலகம்’ படம் வெற்றி அடைவதற்காக அவர் கடுமையாக உழைத்தார். தமிழ்நாடு மற்றும் தெலுங்கு மாநிலங்களில் மாறி மாறி அவர் புரமோஷனுக்கு கலந்து கொண்டார்.

keerthi - 8

இந்த படத்தின் வெற்றிதான் அவரை நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் கொண்டு வந்தது. நயன்தாராவுக்கு 10 கோடி சம்பளம் என்றால், கீர்த்தி சுரேஷ் ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்றபின் அவர் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருந்தார். குறிப்பாக சாணிக்காகிதம் திரைப்படம் அவரது வித்தியாசமான நடிப்பிற்கு ஒரு சான்றாக இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு ’அண்ணாத்த’ படத்தில் கீர்த்திக்கு கிடைத்தது. ரஜினிக்கு ஜோடியாக தனது அம்மா மேனகா நடித்திருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

முதல் படத்தின் சம்பளம் ரூ.1 லட்சம்.. இன்று ரூ.10,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த நடிகை?

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து யாரும் அறியாத ஒரு உண்மை என்னவெனில் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதுதான். அவர் மிகச்சிறப்பாக கவிதை எழுதுவார் என்பதும் அவர் மலையாளத்தில் எழுதிய பல கவிதைகள் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

keerthi - 4

கீர்த்தி சுரேஷ் மிகச்சிறந்த நடிகையாக இருந்தாலும் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன. குறிப்பாக தளபதி விஜய் உடன் அவர் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் ஒன்றாக வாழ்வதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தை தயாரிப்பதும் விஜய் தான் என்றும் அந்த படம் முழுக்க முழுக்க தயாரிக்கப்படுவது விஜய்யின் பணம்தான் என்றும் வதந்திகள் கிளம்பி வருகின்றன.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடையை கணிசமாக குறைத்தார். பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும், ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதால் மீண்டும் அவர் உடல் எடையை கூட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எம்ஜிஆரின் லட்சியப் படம் இதுதான்…! திரைக்கதை எழுதியது பிரபல டைரக்டர் ! இது மட்டும் நடந்திருந்தால் அவரது லெவலே வேற..!

உடல் எடை குறைத்த போது அவர் மிகவும் கண்றாவியாக இருப்பதாக படுமோசமாக நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டார். எத்தனை விமர்சனம் இருந்தாலும் இன்றும் கூட அவர் நம்பர் 2 இடத்தில் தான் தென்னிந்திய திரையுலகில் உள்ளார் என்பதும் அவரது திரையுலக வாழ்வு இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்பது உறுதி என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...