அஜித் விஜய்க்கு இணையான புகழ்.. 2 படங்களை மிஸ் செய்ததால் படுவீழ்ச்சியடைந்த அப்பாஸ்..!

By Bala Siva

Published:

இன்று விஜய், அஜித்துக்கு இணையாக தமிழ் திரை உலகில் புகழ்பெற்றிருக்க வேண்டிய நடிகர் அப்பாஸ். இரண்டு முக்கிய திரைப்படத்தை மிஸ் செய்ததால் சினிமா வாய்ப்புகளை இழந்தது மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் வறுமையை அடைந்ததாகவும் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அப்பாஸ் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள், ஏஆர் ரஹ்மானின் சூப்பர் ஹிட் பாடல்கள் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

19 வயதில் சினிமா எண்ட்ரி.. 20 வயதில் காதல்.. 12 வயது மூத்தவரை திருமணம் செய்த நஸ்ரியா…!

அந்த படம் வெளியான போது கல்லூரி மாணவிகள் அவரை கொண்டாடினர். தங்கள் கனவுக்கண்ணனாக அவரை வர்ணித்து கொண்டனர். அந்த படத்தின் வெற்றி காரணமாக அவரது இரண்டாவது படம் ’விஐபி’ படமும் சூப்பர் ஹிட் ஆனது.

abbas1

இதனை அடுத்து அவர் ஒரே நேரத்தில் 18 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படங்களின் கதையில் அவர் கவனம் செலுத்தவில்லை. முழுக்க முழுக்க தனது மேனேஜரின் கட்டுப்பாட்டில் இருந்த அப்பாஸ், மேனேஜரையே கதை கேட்க வைத்தார். அப்பாஸ் எந்த கதையில் நடிக்க வேண்டும் என்பதை மேனேஜரே முடிவு செய்தார்.

இந்த நிலையில் தான் அப்பாஸ் நடித்த ’பூச்சூடவா’, ‘இனி எல்லாம் சுகமே’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டும் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதன் பின்னர் ’ஜாலி’ ’ஆசைத்தம்பி’ ’பூவேலி’ ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த அனைத்து தயாரிப்பாளர்களும் திரும்ப வாங்கிக் கொண்டனர். இதனை அடுத்து கிட்டத்தட்ட அவர் திரையுலகில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

கமல், ரஜினியை காக்க வைத்த நடிகை.. ஒரு கிராமத்தை தத்தெடுத்த அதிசயம்..!

இந்த நிலையில்தான் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு அப்பாஸிடம் தான் இயக்குனர் பாசில் கேட்டிருந்தார். ஆனால் வழக்கம்போல் அவரது மேனேஜர் அந்த படத்தில் அப்பாஸ் நடிக்க மாட்டார் என்று அப்பாஸிடம் கேட்காமல் கூறிவிட்டார்.

abbas2

அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’ஜீன்ஸ்’ படத்தில் முதலில் அப்பாஸ் தான் தேர்வு செய்யப்பட்டார். அந்த படத்தில் அவருடைய மேனேஜர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த இரண்டு படத்தில் மட்டும் அப்பாஸ் நடித்திருந்தால் இன்று அஜித் விஜய்க்கு இணையாக ஒரு நட்சத்திரமாக இருந்திருப்பார் என்பதும் இந்த இரண்டு படத்தை அவர் மேனேஜரால் இழந்ததை அடுத்து மிகப்பெரிய சரிவுக்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கமல்ஹாசனின் ’பம்மல் சம்பந்தம்’ ரஜினிகாந்தின் ’படையப்பா’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு விலகி, வேறு சில வேலையை தொடங்கினார்.

குறிப்பாக எஸ்பிபியின் இசை நிகழ்ச்சி ஒன்றை அவர் பிரமாண்டமாக நடத்தினார். இந்த நிகழ்ச்சி மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை அடுத்து அதில் அவருக்கு கொஞ்சம் வருமானம் கிடைத்தது. ஆனால் அவரை முழுக்க முழுக்க பிரபல நடிகர் ஒருவர் சதி செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுவது உண்டு.

அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்று மட்டுமல்ல இந்தியாவே வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். தனது மனைவி குழந்தைகளுடன் அவர் நியூசிலாந்து சென்றார். அங்கே பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். அங்கு அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.

அதன் பிறகு ஒரு பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தார். அந்த கடை ஓனரின் நன்மதிப்பை பெற்றதால் நியூசிலாந்திலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர் ஓரளவு பணம் சொத்து சேர்த்து நியூசிலாந்து நாட்டில் நிம்மதியாக இருக்கிறார்.

மேலும் நியூசிலாந்து நாட்டில் குழந்தைகளின் மோட்டிவேஷன் பேச்சாளராகவும் அவர் மாறியுள்ளார். குறிப்பாக தற்கொலைக்கு எதிராக அவர் பேசும் பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நடிகருடன் ஜோடியாக 130 படங்கள்.. கின்னஸ் சாதனை செய்த நடிகை..!

மீண்டும் சினிமாவுக்கு நான் கண்டிப்பாக வருவேன், அப்போது என்னுடைய எண்ட்ரி வேற லெவலில் இருக்கும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தாலும் அவர் நியூசிலாந்தில் தனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த வாழ்க்கையை விட்டு அவர் மீண்டும் திரையுலகிற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.